சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடங்கி மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நடக்க உள்ளது.
இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-2 தேர்வை 6,737 பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும், சிறைக்கைதிகள் 88 பேரும் எழுதுகிறார்கள். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. நாளை துவங்கி மார்ச் 31 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
மொத்தம் 2,272 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை அருகம்பாக்கம் அரசு பள்ளியில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.