வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காவேரி மருத்துவமனை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனைக்கு மீண்டும் வந்த கனிமொழி இன்று காலை 6.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் 7.45 மணியளவில் மீண்டும் மருத்துவமனை வந்துள்ளார்.
DMK leader Kanimozhi meets people gathered outside Chennai's Kauvery hospital where her father and former Tamil Nadu CM M Karunanidhi is undergoing treatment. The hospital stated a decline in his medical condition yesterday. pic.twitter.com/l87nQ0PwJf
— ANI (@ANI) August 7, 2018
மேலும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய தி.மு.க. ராஜ்யசபா எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.