கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட குழு -அதிமுக!

ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுக-வில் கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jun 12, 2019, 03:28 PM IST
கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட குழு -அதிமுக! title=

ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுக-வில் கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றி ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். 

செல்லப்பாவின் இந்த கருத்துக்கு கட்சியில் சில நிர்வாகிகள் ஆதரவும் தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரம் தற்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டயில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியானது.

எனினும் கூட்டம் முடிவடைந்தபின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒற்றை தலைமை தொடர்பாக இன்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை என்று தெரிவித்தார். தற்போது உள்ளபடி செயல்பட ராஜன் செல்லப்பா ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மேலும் இன்று நடைப்பெற்ற கூட்டம் இது தேர்தலுக்கு பின்னால் நடைபெறும் வழக்கமான கூட்டம் தான் எனவும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது எனவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் தற்போது அதிமுகவில் கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக எம்.பி., எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழு தொடர்பாக ஆலோசனை நடைப்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Trending News