கன்னட மொழியில் ரீமேக் ஆகும் தனுஷின் பா.பாண்டி!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 7, 2018, 08:21 PM IST
கன்னட மொழியில் ரீமேக் ஆகும் தனுஷின் பா.பாண்டி! title=

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்து சாதித்த திரைப்படம் ’பவர் பாண்டி’.

ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் இப்படத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தனர். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ப்ளிம்ஸ் இப்படத்தினை தயாரித்தது.

தமிழில் பெரும் வெற்றி கண்ட இத்திரைப்படம் தற்போது கன்னட மொழியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராஜ்கிரன் கதாப்பாத்திரத்தில் அம்ரீசும், தனுஷ் வேடத்தில் சுதீப் நடிக்கவுள்ளனர்.

ரேவதி வேடத்தில் சுஹாசினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது!

Trending News