2019 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இலங்கை vs தென் ஆப்ரிக்கா

இன்று முதல் உலக கோப்பையில் பங்கேற்க்க உள்ள அணிகள் பயிற்ச்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 24, 2019, 02:16 PM IST
2019 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இலங்கை vs தென் ஆப்ரிக்கா title=

டெல்லி/இங்கிலாந்து: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.

ஏற்கனவே உலக கோப்பை தொடரில் விளையாடும் அணிகளை அந்தந்த நாடுகள் அறிவித்துள்ளது. உலக கோப்பையில் பங்கேற்ப்பதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்து வந்தடைந்துள்ளன. 

உலக கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 பயிற்ச்சி ஆட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்ச்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த பயிற்ச்சி ஆட்டம் மே 24 முதல் மே 28 வரை நடைபெற உள்ளது.

முதல் இரண்டு பயிற்ச்சி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடும். இது கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல மற்றொரு ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாட உள்ளது. இந்த பயிற்ச்சி ஆட்டம் சோபியா கார்டன்ஸ், கார்டிஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய பயிற்சி ஆட்டம் விவரம்:-
முதல் பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டல் - மாலை 3 மணிக்கு...
2_வது பயிற்சி ஆட்டம்: இலங்கை vs தென் ஆப்ரிக்கா - சோபியா கார்டன்ஸ், கார்டிஃப் - மாலை 3 மணிக்கு....

Trending News