ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Asian Games 2023 Medals List: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை, இந்திய வீரர்கள் பங்கு பெறும் போட்டிகள் என்ன? போன்ற விவரங்களை குறித்து அறிக.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 28, 2023, 02:44 PM IST
  • இந்திய வீரர்கள் இதுவரை 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இந்தியா 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? title=

India Medals In Asian Games 2023: சீனாவின் ஹாங்சூ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5வது நாளான இன்று, இந்திய ஆடவர் நீச்சல் அணி 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​போட்டியில் தேசிய சாதனையுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை, இந்திய வீரர்கள் பங்கு பெறும் போட்டிகளின் விவரம், எத்தனை தங்க பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.

இன்று (வியாழக்கிழமை) ஆசிய விளையாட்டுப் போட்டி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி முதல் தங்கம் வென்றது. இந்த போட்டியில் சரப்ஜித் சிங், அர்ஜூன் சிங், ஷிவா நர்வால் ஆகிய மூவரும் 1734 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றனர். அதேபோல 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளனர்.

வூசு: 60 கிலோ எடைப் பிரிவில் ரோஷிபினா தேவி முதல் பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டியில் சீனாவின் ஜியோவேய் வூவிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஆசிய விளையாட்டு வரலாற்றில் வூசுவில் இந்தியா வெல்லும் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.

துப்பாக்கி சுடுதல்: ஆடவர் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சரப்ஜித் சிங், அர்ஜுன் சிங், ஷிவா நர்வால் ஆகிய மூவரும் 1734 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். இந்த போட்டியில் சீனா 1733 புள்ளிகளுடன் வெள்ளியும், வியட்நாம் 1730 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன.

நீச்சல்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 4x100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் தேசிய சாதனையுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய நீச்சல் வீரர்கள் தனிஷ் ஜார்ஜ் மேத்யூ, விஷால் கிரேவால், ஆனந்த் ஏஎஸ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் ஆடவருக்கான 4xm நீச்சல் போட்டியில் 3:21.22 வினாடிகளில் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இந்த போட்டியில் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

மேலும் படிக்க - துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா மகளிர் அணிக்கு தங்கம்!

கிரிக்கெட்: ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட்டின் குரூப் சி ஆட்டத்தில் மலேசியா 73 ரன்கள் வித்தியாசத்தில் சிங்கப்பூரை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மலேசியா 20 ஓவரில் 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்களை துரத்திய சிங்கப்பூர் 17.5 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பேட்மிண்டன்: மகளிர் அணி 16வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தியது. இந்தியா தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பேட்மிண்டனில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றி தொடக்கம் கொடுத்துள்ளார் பிவி சிந்து. மங்கோலிய வீரரை 21-2, 21-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா 1-0 என முன்னிலை பெற்றார். இதற்கிடையில், அஷ்மிதா சாலிஹா 21-2, 21-3 என்ற செட் கணக்கில் கெர்லன் தர்கான்பாதரை தோற்கடித்து, மங்கோலியாவுக்கு எதிராக இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

ஸ்குவாஷ்: இந்தியாவின் தன்வி கண்ணா 11-9, 1-11, 11-7, 11-13, 5-11 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஐஃபாவிடம் தோல்வியடைந்தார். ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா, அனாஹத் சிங் அடங்கிய இந்திய ஸ்குவாஷ் மகளிர் அணி மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது.

சைக்கிள் போட்டி: ஆண்களுக்கான ஸ்பிரிண்ட் போட்டியில் இந்திய சைக்கிள் வீரர் டேவிட் பெக்காம் எட்டாவது இடம் பிடித்தார். டேவிட் பெக்காம் 0.109 வினாடிகள் இலக்கை அடைந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் ஸ்பிரிண்ட் போட்டியில் எந்த ஒரு இந்தியரின் சிறந்த ஆட்டமாகும். டேவிட் பெக்காம் நாளை மதியம் 12:00 மணிக்கு ஆண்கள் கெய்ரின் ஹீட்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்.

குத்துச்சண்டை: பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா, சவுதி அரேபியாவின் ஹடீல் கஸ்வான் அஷூரை எதிர்த்து 16வது சுற்றில் வெற்றி பெற்றார். 22 வயதான இந்திய குத்துச்சண்டை வீரர் ஜாஸ்மின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அக்டோபர் 1ம் தேதி மதியம் 12:30 மணிக்கு நடக்கும் காலிறுதியில் ஜாஸ்மின், வட கொரியாவின் ஆங்யோங் வோனை எதிர்கொள்கிறார்.

டேபிள் டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் பிரிவு 32வது சுற்றில் இந்தியாவின் சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஜோடி 11-5, 11-3, 11-3 என்ற செட் கணக்கில் மங்கோலியாவின் செர்-ஓட் கன்குயாக், மன்லைஜர்கள் முன்க்-ஓச்சிர் ஜோடியை தோற்கடித்தது.

மேலும் படிக்க - Asian Games 2023: வெண்கலம் வென்றார் தமிழர்... யார் இந்த விஷ்ணு சரவணன்?

இந்தியா துப்பாக்கிச் சுடலில் 11 பதக்கங்கள் வென்றது
துப்பாக்கி சுடலில் இந்தியா 11 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. அதில் 3 தங்கம் அடங்கும். ஐந்தாவது நாளான செப்டம்பர் 28 அன்று சரப்ஜித் சிங், அர்ஜுன் சிங் மற்றும் ஷிவா நர்வால் ஆகிய மூவரும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றனர். முன்னதாக செப்டம்பர் 27ம் தேதி, நான்காவது நாளான நேற்று, 25 மீட்டர் ரேபிட் ஃபயர் போட்டியில், பெண்கள் அணி மனு பாகர், இஷா சிங், ரிதம் சங்வான் ஆகியோர் தங்கமும், செப்டம்பர் 25ல் திவ்யான்ஷ் சிங் பன்வார், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், ருத்ராக்ஷ் பாட்டீல் ஆகியோர் 10 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும் வென்றனர்.

வூசு போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை
ஆசிய விளையாட்டு வரலாற்றில், இந்தியா இதுவரை 2 வெள்ளி, 8 வெண்கலம் என 10 பதக்கங்களை வூசு [போட்டியில் வென்றுள்ளது. ரோஷிபினா தேவிக்கு முன், சந்தியாராணி தேவி 2010 குவாங்சோவில் பெண்களுக்கான 60 கிலோ பிரிவில் முதல் வெள்ளி வென்றார். ஆசிய போட்டியில் ரோஷிபினா தேவிக்கு இது இரண்டாவது பதக்கம். முன்னதாக, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற பதக்கம் எவ்வளவு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 23 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 5 தங்கம். இதில் 3 பேர் துப்பாக்கி சுடலில் தங்கம் வென்றுள்ளனர். குதிரையேற்றம் குழு போட்டியில் ஒரு தங்கம் கிடைத்தது. அதே சமயம் பெண்கள் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றது. இது தவிர இந்தியாவுக்கு 7 வெள்ளிப்பதக்கமும் கிடைத்துள்ளன. இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4, படகோட்டுதல் போட்டியில் 2 மற்றும் படகு போட்டியில் 1 என அடங்கும். இதுவரை இந்திய வீரர்கள் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் படகோட்டுதல் போட்டியில் 3 வெண்கலப் பதக்கங்களும், துப்பாக்கிச் சுடலில் 6 பதக்கங்களும், படகு போட்டியில் 2 பதக்கங்களும் கிடைத்துள்ளன.

ரேங்க் நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 81 44 21 146
2 தென் கொரியா 19 19 35 73
3 ஜப்பான் 15 27 24 66
4 உஸ்பெகிஸ்தான் 6 10 13 29
5 இந்தியா 6 8 10 24

மேலும் படிக்க - லபுஷேனை அவுட்டாக்கிய அஸ்வினின் அதிசய பந்து... ரிவர்ஸ் கேரம் பால் என்றால் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News