#IPLAuction: என்னடா இது Chris Gayle-க்கு வந்த சோதனை!

பெங்களூருவில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் நகரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில் நடந்த முதலாவது அமர்வில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்-லை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை!

Last Updated : Jan 27, 2018, 01:34 PM IST
#IPLAuction: என்னடா இது Chris Gayle-க்கு வந்த சோதனை! title=

பெங்களூருவில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் நகரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில் நடந்த முதலாவது அமர்வில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்-லை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை!

முந்தைய IPL-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் இணைந்த விளையாடிய 38 வயதான வீரரின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய்-யாக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு எந்த அணியினரும் ஆர்வமும் காட்டவில்லை.

இதுவரை 101 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய கெய்ல் 3626 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரே ஆட்டத்தில் 175 ரன்கள் எடுத்த லீக்-ன் சிறந்த வீரர் எனும் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பகுதிநேர வலதுகை சுயற்பந்து வீச்சினால் ஜமைக்கா மன்னில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை கொண்டவர்.

இன்றைய ஏலத்தில் முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், கிங்ஸ் XI பஞ்சாப்க்கு ரூ. 7.6 கோடிக்கு விற்கப்பட்டார். 5.2 கோடி ரூபாய் மதிப்பில் சன் ரைஸர் ஹைதராபாத் அணி சிக்கர் தவானை மீட்டெடுத்துக் கொண்டது.

மூன்று முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் உடன் இணைந்து விளையாடிய  மற்றொரு மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர் கியொர்ன் பொலார்ட் ரூ. 5.4 கோடிக்கு ரோஹித் ஷர்மா தலைமையால் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார். 

Trending News