இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டுள்ளது.
துபாயில் நடைபெற்ற தொடக்கவிழாவில் டோனி, அகாடமியின் மற்ற முக்கிய பங்குதாரர்கள், அகாடமியில் புதிதாக சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கிரிக்கெட் அகாடமியில் நான்கு தரை, மூன்று சிமெண்ட் மற்றும் மூன்று மேட் பிட்சுகளும், பாதுகாப்பு வலைகள், இரவு நேர பயிற்சிக்காக விளக்குகள், சுழல் மற்றும் சுவிங் பந்துவீச்சு இயந்திரங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் அங்காடி ஆகிய வசதிகள் உள்ளன.
துபாயில் நடைபெற்ற தொடக்கவிழா வீடியோ:-
MS Dhoni arrives for the launch of his new cricket academy here in Dubai.
Scenes. #Dhoni pic.twitter.com/s1EAE0rNKS
— Stu Appleby (@Stuart_Appleby) November 11, 2017
Inaugurating ' MS Dhoni Cricket Academy ' in Dubai @msdhoni
Video Credit : @pacific_club @parvezkhan35 #MSDhoni #Dhoni #PacificSportsClub #msdca #Dubai #MSDinDubai #springdalesschooldubai pic.twitter.com/96ANLZWR2P— MS Dhoni 7781 (@msdhoni_7781) November 11, 2017