1999-ம் ஆண்டு முதல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆஷிஷ் நெஹ்ரா கடந்த நவம்பர் 1-ம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலி தலைமையில் கடைசி போட்டி விளையாடி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு அவருக்கு சக இந்திய வீரர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை தந்தனர். இந்த பிரியாவிடையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சேவாக் என பலர் கலந்துக்கொண்ட வீடியோ காட்சி:-
A perfect farewell party for Ashish Nehra Ji!
Thank you Ashis Nehra! #ThankYouNehraJi #ThankYouAshishNehra #AshisNehra #TeamIndia #BCCI pic.twitter.com/S3xZNF9IWD— Indian Sports (@ItsIndianSports) November 2, 2017
ஆஷிஷ் நெஹ்ரா பற்றி சில குறிப்பு:-
38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர்.
1999-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 17 டெஸ்ட் விளையாடி 44 விக்கெட் எடுத்துள்ளார்.
120 ஒருநாள் போட்டியில் விளையாடி 157 விக்கெட் எடுத்துள்ளார்.
26 டி20 போட்டியில் விளையாடி 34 விக்கெட் எடுத்துள்ளார்.
கேப்டன் அசாருதின் தலைமையில் தனது ஆட்டத்தை தொடங்கிய அவர், தற்போதைய கேப்டன் விராத் கோலி என பல கேப்டன்களிம் கீழ் விளையாடி உள்ளார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து பின்னர் முடிவு செய்வார் என தெரிகிறது.