இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பில் வீரேந்திர சேவாக்? விரைவில் அறிவிப்பு

இந்தியத் தேர்வுக் குழுவில் சேத்தன் ஷர்மாவுக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 22, 2023, 09:52 AM IST
  • அடுத்த தேர்வுக்குழு தலைவர்?
  • வீரேந்திர சேவாக் நியமிக்கப்பட வாய்ப்பு
  • பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்
இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பில் வீரேந்திர சேவாக்? விரைவில் அறிவிப்பு  title=

இந்தியத் தேர்வுக் குழுவுக்கு புதிய தேர்வாளரை பிசிசிஐ தேடிக் கொண்டிருக்கிறது. முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா 2023 பிப்ரவரியில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு தனது பதவியை இழந்தார். அந்த ஸ்டிங்கில், இந்திய வீரர்கள் மற்றும் அணி தேர்வு தொடர்பான ரகசிய தகவல்கள் குறித்து அவர் பேசியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவர் வடக்கு மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணியின் தலைமை தேர்வாளராக வீரேந்திர சேவாக்?

பிசிசிஐ வடக்கு மண்டலத்திலிருந்து ஒரு தேசிய தேர்வாளரைத் தேடிக் கொண்டிருக்கிறது, ஏனெனில் விதிகளின்படி, பிசிசிஐ 5 தேர்வாளர்களைக் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது. அதில் ஒருவர் தலைமை தேர்வாளராக நியமிக்கப்படுவார். தற்போது, ​​ஷிவ் சுந்தர் தாஸ் இடைக்கால தலைமை தேர்வாளராக உள்ளார். விரைவில் புதிய தலைமை தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ள பிசிசிஐ வடக்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளது. அந்த லிஸ்டில் வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் இருந்தாலும், சேவாக்கிற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “நிர்வாகிகள் குழுவின் பதவிக் காலத்தில், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வீரேந்திர்ர சேவாக்கிடம் கேட்கப்பட்டது. ஆனால், அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பயிற்சியாளர் பதவியானது அனில் கும்ப்ளே வசம் சென்றது. இப்போது பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் அவர் தானாக விண்ணப்பிப்பார் என நினைக்கவில்லை. இது குறித்து உரிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றார்.  

மேலும் படிக்க | Ashes 2023: Bazball முறை ஊத்திக்கிச்சா... தோல்விக்கு பின் பென் ஸ்டோக்ஸ் சொன்னது இதுதான்!

சேவாக்கிற்கு வாய்ப்பு அதிகம் ஏன்?

தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட வீரர்களின் லிஸ்டில் இருக்கும் முன்னாள் பிளேயர்கள் சேனல்கள் அல்லது ஐபிஎல் அணிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். மேலும், முழுமையாக கிரிக்கெட் மற்றும் அதன் தொடர்புடைய பணிகளில் இருந்து விலகி 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற பட்டியலுக்குள் அவர்கள் வரவில்லை. மணீந்தர் சிங் இரண்டு முறை விண்ணப்பித்து நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவரது விண்ணப்பம் மேற்கொண்டு பரிசீலிக்கப்படவில்லை. 

விரைவில் அறிவிக்கும் பிசிசிஐ

சிலர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க தவிர்ப்பதற்கு காரணம் மிக குறைந்த சம்பளம். இதனை பலர் விரும்புவதில்லை. இன்னும் சிலர் விண்ணப்பித்தால்கூட தகுதியானவர்களாக இருப்பதில்லை அல்லது எதிர்ப்பார்புகளை பூர்த்தி செய்பவர்களாக இருப்பதில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. இப்போது வீரேந்திர சேவாக்கை அந்தப் பொறுப்புக்கு கொண்டுவர பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அது சேவாக்கின் முடிவுக்குட்பட்டது என்றும் கூறப்படுகிறது. சேவாக் விரும்பினால் அந்த வாய்ப்பு உறுதியாக கிடைக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

தேர்வுக்குழு தலைவர் ஊதியம் என்ன?

மூத்த தேர்வுக் குழுவின் தலைவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியும், மற்ற நான்கு உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ரூ.90 லட்சமும் கிடைக்கும். இந்திய அணிக்காக விளையாடிய மூத்த கிரிக்கெட் வீரர்களில் திலீப் வெங்சர்க்கார் (2006 முதல் 2008 வரை) மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (2008 முதல் 2012 வரை) ஆகியோர் கடைசியாக தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தனர். ஸ்ரீகாந்த் இந்த பதவியில் இருந்தபோது மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் இந்த பதவிக்கு ஊதியம் இல்லை.

மேலும் படிக்க | MS Dhoni: 2007இல் எப்படி தோனி கேப்டனாக தேர்வானார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News