RCBvsKKR:கோலியின் கோப்பை கனவை தகர்த்த கொல்கத்தா - பழிவாங்க காத்திருக்கும் ஆர்சிபி

கடந்த ஐபிஎல் போட்டியில் பிளேப் சுற்றில் இருந்து பெங்களுரு அணியை கொல்கத்தா வெளியேற்றியது   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2022, 03:24 PM IST
  • கொல்கத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதல்
  • பழிவாங்க காத்திருக்கும் விராட் கோலி
  • பெங்களூருவின் சாம்பியன் கனவை தகர்த்தது
RCBvsKKR:கோலியின் கோப்பை கனவை தகர்த்த கொல்கத்தா - பழிவாங்க காத்திருக்கும் ஆர்சிபி   title=

ஐபிஎல் போட்டியில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணி பெங்களுரு. விராட் கோலி தலைமையில் இதுவரை களமிறங்கிய பெங்களுரு, இந்த சீசனில் புதிய கேப்டன் பாப் டூபிளசிஸ் தலைமையில் களம் கண்டுள்ளது. ஆனாலும், அந்த அணிக்கு விடிவுகாலம் பிறந்ததாக தெரியவில்லை. முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்தபோதும், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி, இமாலய இலக்கை சேஸ் செய்து மாஸ் காட்டியது. இதனால், இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களுரு அணி உள்ளது. பேட்டிங்கில் வலிமையான அணியாக இருக்கும்போதும், பந்துவீச்சில் கட்டுக்கோப்பு இல்லாததால் கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது.

மேலும் படிக்க | இந்திய அணியில் பும்ராவின் இடத்தை நிரப்பப்போகும் 150 கி.மீ வேகப்புயல்

மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்த ஆண்டு களம் கண்டுள்ள கொல்க்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதல் போட்டியில் வீழ்த்தியிருந்தது. நடப்பு சாம்பியனை வீழ்த்திய மகிழ்ச்சியில் இருக்கும் கொல்கத்தா, இப்போட்டியிலும் அதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இவ்விரு அணிகள் மோதின. அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று, பெங்களூரு அணியின் ஐபிஎல் கோப்பை கனவை தகர்த்தது. அந்த கோபம் இன்னும் பெங்களுரு அணிக்கு நிச்சயம் இருக்கும். அதனால், அதற்கான பழிக்கு தீர்க்கும் வகையில் பெங்களுரு அணி விளையாடும்.

இவ்விரு அணிக்களுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இரவு 7.30 மணிக்கு டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பெங்களுரு அணி இருக்கிறது. முகமது சிராஜை துருப்புச் சீட்டாக அந்த அணி நம்பியிருந்த நிலையில், அவரது பந்துவீச்சு கடந்த போட்டியில் எடுபடவில்லை. தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய அவர், இறுதிக் கட்டத்தில் சொதப்பினார். KKR அணியை பொறுத்த வரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக உள்ளது. வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் சுழற்பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர். உமேஷ் யாதவும் பவர்பிளேயில் கவனமாக இருக்க வேண்டும்.  இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன. இதில் கொல்கத்தா அணி ஆட்டங்களிலும், RCB 13 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், கர்ன் ஷர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி

மேலும் படிக்க | IPL2022: கடைசி நிமிட பரபரப்பு! தம்பியின் விக்கெட்டை வீழ்த்திய அண்ணன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News