IPL 2021 லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி அணி, சென்னை அணி நேற்று குவாலியர் சுற்றில் மோதிக்கொண்டனர். இந்த சுற்றில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி அணி (Delhi Capitals) 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் (Chennai Super Kings) தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், டூப்ளிஸிஸ் களமிறங்கினர்.
ALSO READ | IPL 2021 CSK VS DC: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
சென்னை அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பா இணைந்து அற்புதமாக அடித்தார்கள். அடுத்து ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பா ஒரே ஓவரில் சூப்பர் கேட்ச்களால் அவுட்டாகி வெளியேறினார்கள். ஸ்ரேயஸின் கேட்ச் ஆட்டத்தின் போக்கில் மாற்றத்தைக் கொடுத்தது.
இறுதி ஓவர்களில் சென்னை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ச்சியடைய, கேப்டன் தோனி (MS Dhoni) தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். 19 வது ஓவரில் இறங்கிய தோனி முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார். இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இறுதி ஓவரின் முதல் பந்திலேயே மொயின் அலி ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நான் ஸ்டிரைக்கில் இறங்கினார். தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசி ஓவரில் இரண்டாவது பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார் தோனி. தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் தோனி. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியும் மூலம் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது சென்னை அணி.
இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் தோனி. தோனியின் வின்னிங் ஷார்ட்டை பலரும் புகழ்ந்து வருகின்றனர். அதன்படி தோனியின் ஆட்டம் குறித்த விராட் கோலி ட்விட் ஒன்று பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது., கிங் இஸ் பேக். கிரிக்கெட்டில் எல்லா நேரத்துக்குமான தலைசிறந்த பினிஷர். இந்த இரவில் மீண்டும் ஒருமுறை என்னை இருக்கையில் இருந்து துள்ளிக்குதிக்க வைத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
Anddddd the king is back the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021
Also Read | மும்பையின் மிரட்டல் அடியில் வீழ்ந்தது ஹைதராபாத்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR