இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணிக்கான சர்வதேச பயணத்தை தொடங்கியுள்ளார் வெங்கடேஷ் ஐயர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 19, 2022, 03:07 PM IST
  • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார் வெங்கடேஷ் ஐயர்
  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வாய்ப்பு
  • டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்
 இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் களம் கண்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கியதால், அவருக்கான இந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது. 

ALSO READ | 2022-ல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் கத்துக்குட்டி அணிகள்..!

இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அஸ்வின், சாஹல் என இரண்டு ஸ்பின்னர் மற்றும் ஷர்துல் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர் என இரண்டு ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி இப்போட்டியில் களம் கண்டுள்ளது. இதனால், மிடில் ஆர்டரில் அண்மையில் வாய்ப்பு பெற்று நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சூர்யகுமார் யாதவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அவருக்கான இடம் எதிர்காலத்தில் தொடர்ந்து கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வாரா? என அனைவரும் இன்றைய போட்டியை உற்று நோக்கி வருகின்றனர். 

ALSO READ | IPL 2022: க்ருணால் பாண்டியா இந்த ஐபிஎல்லின் Sixer King ஆவாரா? பயிற்சி வீடியோ வைரல்!

அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் முகமது சிராஜ் இப்போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தில் உள்ள இஷான் கிஷன் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோரும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்பி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாட உள்ளார். சரியான கலவையுடன் இருக்கும் இந்த இந்திய அணி சிறபாக விளையாடினால், தென்னாப்பிரிக்காவின் வெற்றி பெறுவது கடினம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News