U19CWC - கால் இறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

19 வயதுக்கு உட்பட்டவருக்கான "ஜூனியர் உலக கோப்பை" கிரிக்கெட் போட்டி  நியூசிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. 

Last Updated : Jan 16, 2018, 02:50 PM IST
U19CWC - கால் இறுதிக்குள் நுழைந்தது இந்தியா! title=

19 வயதுக்கு உட்பட்டவருக்கான "ஜூனியர் உலக கோப்பை" கிரிக்கெட் போட்டி  நியூசிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. 

இதில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. கேப்டன் பிரித்வி ஷா (94 ரன்கள்), மன்ஜோத் கல்ரா (86 ரன்கள்) இணை சிறப்பாக விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதன் பின்னர் களமிரங்கிய ஆஸ்திரேலிய அணி 42.5 ஓவர்களில் 228 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. 

இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசி., அணி தரப்பில் அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ் 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் கம்லேஷ் நாக்ராகோடி, ஷிவம் மாவி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். 

இந்திய அணி கேப்டன் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அதேநாளில் நடந்த மற்ற லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் வெற்றி பெற்றன. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று பப்புவா நியூ கினியாவை சந்தித்தது.

இப்போட்டியில் பப்புவா நியூ கினியாவை அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 8 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டி அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி கால் இறுதிக்குள் நுழைந்தது.

 

Trending News