ICC World Cup 2023, Best Fast Bowlers: கிரிக்கெட் என்பது அடிப்படையில் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு உளவியல் ரீதியான யுத்தமாகும். எனவே, ஆட்டத்தில் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்பினருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
ஆனால், இந்த டி20 யுகத்தில் பந்துவீச்சாளர்களின் நிலை சற்று பரிதாபகரமாகவே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு புது பந்துகளை வீசுவதன் மூலம் வேகப் பந்துவீச்சாளர்களின் கலைகளுள் ஒன்றான ரிவர்ஸ் ஸ்விங்கே தற்போது அரிதாகிவிட்டது. இருந்தாலும், சூழலோ, விதியோ எது எப்படியிருந்தாலும் பந்துவீச்சாளர்கள் எப்போதும் உறுதியாக நின்று அணிக்கு வெற்றி பெற்று தருவதில் முதன்மையாக இருக்கின்றனர்.
அந்த வகையில், வரும் உலகக் கோப்பை தொடரில் கவனிக்கப்பட வேண்டிய டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம். இந்த பட்டியல் தென்னாப்பிரிக்காவின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் சில நாள்களுக்கு முன் கூறிய கருத்துகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 5 பந்துவீச்சாளர்கள் குறித்து அவரின் பார்வையையும் இதில் காணலாம்.
மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையை ஆளப்போகும் 5 ஸ்பின்னர்கள் இவங்கதான்... எழுதி வச்சுக்கோங்க!
முகமது சிராஜ்
2023ஆம் ஆண்டில் மட்டும் சிராஜ் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய அணிக்கு தொடக்க ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் சிராஜின் பங்கு அளப்பரியது. இந்தாண்டில் சிராஜின் விக்கெட் சராசரி 14.70 மற்றும் எகானிமி ரேட் 4.91 ஆகும். ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 21 ரன்களை கொடுத்திருந்தார். இது யாராலும் மறக்க முடியாத போட்டியாகும். இவர் குறித்து ஸ்டெய்ன் கூறுகையில்,"பந்தை வந்துவுடன் ஸ்விங் செய்து, பேட்டர்கள் மீது தாக்குதல் தொடுப்பவர். இந்திய அணியின் முக்கிய வீரர் ஆவார்.
ககிசோ ரபாடா
இந்த வருடம் அவர் 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இருப்பினும் 9 விக்கெட்டுகளை சரித்துள்ளார். அவரின் சராசரி 27.44 ஆக உள்ளது. இவர் குறித்து ஸ்டெய்ன் கூறுகையில்,"நல்ல பவுன்ஸ் செய்பவர், நல்ல வேகத்திலும் வீசக்கூடியவர். இந்திய சுழலுக்கு அதிகம் பழக்கப்பட்டவர்" என்றார்.
ஷாகின் ஷா அப்ரிடி
அப்ரிடி இந்தாண்டு 12 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரின் சராசரி 22.04 ஆகும். இவர் குறித்து ஸ்டெய்ன் கூறுகையில், ரோஹித் சர்மா அப்ரிடியிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என குறும்புடன் எச்சரித்தார்.
டிரன்ட் போல்ட்
போல்ட் இந்தாண்டில் 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இதில் அவர் ஒரு போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. போல்ட் தொடக்க ஓவர்களிலேயே நியூசிலாந்து அணிக்காக பந்தை ஸ்விங் செய்யும் வல்லமை படைத்தவர், பெரிய விக்கெட் டேக்கர் என ஸ்டெய்ன் கூறினார். குறிப்பாக உலகக் கோப்பையில் இவர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் எனவும் கணித்துள்ளார்.
மார்க் வுட்
இங்கிலாந்து அணியின் வேகப்புயல் மார்க் வுட் காயம் காரணமாக வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இங்கிலாந்து அணியின் துருப்புச்சீட்டான வுட் குறித்து ஸ்டெய்ன்,"மார்க் வுட்டிடம் அதிக வேகம் இருக்கிறது. இங்கிலாந்து் அணிக்காக அவர் பல விக்கெட்டுகளை கைப்பற்றுவார். அவரின் அச்சுறுத்தல் வேகமே அவருக்கு பல விக்கெட்டுகளை பெற்றுத் தர போகிறது" என்றார்.
டேல் ஸ்டெய்னின் இந்த வரிசையில் பும்ரா, ஸ்டார்க் போன்றோர் இடம்பெறவில்லை. 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் சொந்த மண்ணில் தொடரை சந்திக்கும் இந்தியா ஆகிய அணிகளுள் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் தனது கணிப்பை கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ