ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் களத்தில் சந்திக்க இருப்பதால், இந்த போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. கடைசியாக சந்தித்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வரலாறு படைத்திருப்பதால், அந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணி காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதுவரை ஆசியக்கோப்பையில் நடைபெற்ற மூன்று முக்கிய சம்பவங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
1. ஷாகீத் அப்ரிடி சம்பவம்
பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் மிகப்பெரிய சாதனைகளையும், அதிரடி மன்னனாகவும் வலம் வந்த ஷாகீத் அப்ரிடி, ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2014 ஆம் ஆண்டு சம்பவம் செய்தார். அந்த ஆண்டு பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அப்ரிடி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். அஸ்வின் பந்தில் சிக்சர் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
2. சேஸ் கிங்காக அவதரித்த கோலி
விராட் கோலி முதன்முதலாக 2010 ஆசிய கோப்பையில் விளையாடினார். அவர் இலங்கைக்கு எதிராக கெளதம் கம்பீருடன் இணைந்து 300+ ஸ்கோரைத் சேஸிங் செய்தார். அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியிலும் அதையே மீண்டும் செய்தார். அந்த போட்டியில் கவுதம் கம்பீர் உடனடியாக அவுட்டாகி வெளியேற சச்சின் டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து 183 ரன்கள் எடுத்தார். இன்று வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அவரின் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.
3) ஹர்பஜன் சிங் செய்த சம்பவம்
ஆசியக்கோப்பை கிரிகெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்பஜன் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாது. 2010 ஆம் ஆண்டு போட்டியில் பாகிஸ்தான் அணி 270 ரன்களை இந்தியாவுக்கு சேஸிங்காக நிர்ணயித்தது. கம்பீர் மற்றும் தோனி ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு அருகாமையில் இந்திய அணியை கொண்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தனர். அப்போது களத்துக்கு வந்த ஹர்பஜனுடன் சோயிப் அக்தர் வாக்குவாதத்தில் ஈடுபட போட்டியில் உட்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், ஹர்பஜன் சிக்சர் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ