National Sports Day: வீரர்களின் உறுதியும், அர்ப்பணிப்பும் மிகவும் உயர்வானது -பிரதமர் மோடி

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2020, 02:27 PM IST
National Sports Day: வீரர்களின் உறுதியும், அர்ப்பணிப்பும் மிகவும் உயர்வானது -பிரதமர் மோடி title=

National Sports Day News: இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாள் (The National sports day) கொண்டாடப்படுகிறது

புகழ்பெற்ற ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand) 1905 இல் பிறந்தார் மற்றும் அவரது நுட்பமான, திறமையான ஹாக்கி திறன்களுக்காக அறியப்பட்டார். 1928, 1932, மற்றும், 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

இந்தநாளில் தேசிய விளையாட்டு விருதுகள், இதில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா (Rajiv Gandhi Khel Ratna) விருது, அர்ஜுனா விருது (Arjuna award), துரோணாச்சார்யா விருது (Dronacharya award), மற்றும் தியான் சந்த் விருது (Dhyan Chand award) ஆகியவை தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று குடியரசு தலைவர் பவனில் இந்திய ஜனாதிபதி (President of India) மூலம் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கப்படுகின்றன.

ALSO READ | IPL 2020: அவசர அவசரமாக இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா... என்ன காரணம்?

தேசிய விளையாட்டு நாளான இன்று, நாட்டின் பிரதமர் (Narendra Modi), விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவுக்காக பங்கேற்று நமது நாட்டை பெருமைப்படுத்திய அனைத்து சிறந்த விளையாட்டு வீரர்களின் சிறப்பான சாதனைகளை கொண்டாடும் நாள் தான் தேசிய விளையாட்டு தினம் ஆகும். அவர்களின் உறுதியும், அர்ப்பணிப்பும் மிகவும் உயர்வானது எனக்கூறிய #NationalSportsDay  என்ற ஹேஸ்டேக்கை பகிந்துள்ளார்.

Trending News