சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3வது லீக் போட்டிகள் நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி 2 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் நேற்று 3வது லீக் (TNPL 2021) போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings), ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors) அணிகள் மோதின. முதலில் ஆடிய திருச்சி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. இந்த லீக் போட்டியில் அதிகபட்சமாக அமித் சாத்விக் 71 ரன்கள் எடுத்தார். ஆதித்ய கணேஷ் 33 ரன்களும், அந்தோணி தாஸ் 35 ரன்கள் எடுத்து இருந்தனர்.
ALSO READ | TNPL 2021: போட்டி அட்டவணை, பங்கேற்கும் அணிகள், நேரம், நேரடி ஒளிபரப்பு -விவரங்கள்
இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய நெல்லை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெல்லை அணி. 6வது விக்கெட் ஜோடியான பாபா இந்திரஜித்-சஞ்சய் யாதவ் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடினர். ஆனால், சஞ்சய் யாதவ் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பாபா இந்திரஜித் 32 ரன்களில் அவுட் ஆனார்.
நெல்லை அணி 13.4 ஓவர்களில் 77 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் திருச்சி அணி முதலிடத்தில் உள்ளது.
ALSO READ | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR