இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் தில்ஷான். அவர் வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியோடும், அடுத்து செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியோடு தாம் ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான திலகரத்னே தில்ஷான் ஆரம்ப காலத்தில் நடுவரிசையில் களம் இறங்கி பேட்செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2009-ம் ஆண்டு முதல் தொடக்க வரிசை வீரராக களம் இறக்கப்பட்டார்.
இதுவரை 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷான் 22 சதங்கள் உட்பட 10,248 ரன்கள் குவித்துள்ளார். 106 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 20 ஓவர் போட்டிகளில் 1884 ரன்கள் தில்ஷான் குவித்துளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.