WTC Final 2023: எங்கள் தோல்விக்கு அவர்கள் இருவர் தான் காரணம் - இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மா!

WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்த பின், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 11, 2023, 10:08 PM IST
  • எங்களின் பந்துவீச்சு சற்று ஏமாற்றமளித்தது - ரோஹித் சர்மா
  • மைதானம் வந்த இந்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் - ரோஹித் சர்மா
  • இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
WTC Final 2023: எங்கள் தோல்விக்கு அவர்கள் இருவர் தான் காரணம் - இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மா! title=

Rohit Sharma On WTC Final 2023 Loss: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரலிய அணி கோப்பை வென்றது. 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா படைத்தது. 

மறுப்புறம், பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்தியாவின் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளித்தது என்றுதான் கூற வேண்டும். கடைசி நாள் வரை நம்பிக்கை அளித்து வந்த இந்திய அணி, கடைசி நாளான இன்று முதல் செஷனிலேயே ஆல்-அவுட்டானது. இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டியில் தோல்வியடைவது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கங்களை தீர்த்துகொட்டி வருகின்றனர். விராட் கோலி, ஜடேஜா, ரஹானே என நட்சத்திர வீரர்கள் மீது வைக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த நம்பிக்கை தவிடுபொடியானதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். 

தோல்வியை அடுத்து, இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியதாவது,"கடைசி வரை போராடினோம். கடந்த நான்கு வருடங்களும் இதற்காக கடுமையாக உழைத்தோம். இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவது நேர்மையாக எங்களுக்கு ஒரு நல்ல சாதனை என்றுதான் கூறுவேன். ஆனால் நாங்களும் ஒரு படி மேலே செல்ல விரும்புகிறோம். இங்கு வருவதற்கு கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் செய்தவற்றிலிருந்து, அந்த கிரெட்டிட்டை உங்களால் எடுக்க முடியாது. ஒட்டுமொத்த ஒற்றுமையின் பெரும் முயற்சி இது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை, ஆனால் நாங்கள் தலை நிமிர்ந்து போராடுவோம்" என்று ரோஹித் தொடர்ந்து கூறினார்.

மேலும் படிக்க | WTC Final 2023: ஆஸ்திரேலியா அபார வெற்றி..! 2வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்ற இந்தியா

"டாஸ் வென்று நன்றாகத் தொடங்கினோம் என்று நினைத்தேன். முதல் செஷனில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம், பிறகு நாங்கள் பந்துவீசிய விதம் சற்று ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. ஆஸ்திரேலிய பேட்டர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஹெட் உள்ளே வந்து ஸ்டீவன் ஸ்மித்துடன் நன்றாக விளையாடினார். அதுதான் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டியில் இருந்து துரத்தியது" என்று ஆஸ்திரேலிய வீரர்களை அவர் பாராட்டினார். 

இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடந்த போதிலும், இந்திய அணிக்கு பார்வையாளர்களிடம் இருந்து பெரும் ஆதரவு இருந்தது. இதற்கு, இந்திய கேப்டன் தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்களையும், இந்தியா 296 ரன்களையும் எடுத்தது. அடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 444 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. 

இந்திய அணி நான்காவது இன்னிங்ஸில் நல்ல தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், நேற்றைய போட்டியில் கில், ரோஹித், புஜாரா ஆகியோர் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். விராட், ரஹானே ஆகியோர் இன்று ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் இந்தியா மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மீண்டும் மீண்டுமா... 2014 டூ 2023 இந்திய அணி தோற்ற ஐசிசி நாக்-அவுட் போட்டிகள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News