ஆஷஸ் டெஸ்ட் தொடர்: கடைசி போட்டி இங்கிலாந்து வெல்லுமா?

பரபரப்புக்கு கொஞ்சம் குறையாத ஆஷஸ் போட்டியின் 5_வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Last Updated : Jan 4, 2018, 03:59 PM IST
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: கடைசி போட்டி இங்கிலாந்து வெல்லுமா? title=

கிரிக்கெட்டில் எப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டியோ, அதே பரபரப்புக்கு கொஞ்சம் குறையாத ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையில் நடக்கும் ஆஷஸ் போட்டிகள். 70-வது ஆஷஸ் தொடர் கடந்த நவம்பர் 23-ம் தேதி தொடங்கியது. 

தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3-0 என முன்னிலையில் உள்ளது. 4_வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 

இந்நிலையில் சிட்னி மைதானத்தில் இரு அணிகளுக்குமான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கின. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணி ஆடக்கூடும். மேலும் சிட்னி மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 4 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.

ஆஸ்திரேலியா அணியை போருத்ட வரை ஏற்கனவே ஆஷஸ் தொடரை வென்றுவிட்டதால், கடைசி டெஸ்ட் போட்டியையும் வென்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முனைப்பில் விளையாடக்கூடும்.

கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

 

 

Trending News