தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2019-20 ஆண்டின் உள்நாட்டு தொடரினை தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடவுள்ளது!

Last Updated : Sep 12, 2019, 04:56 PM IST
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! title=

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2019-20 ஆண்டின் உள்நாட்டு தொடரினை தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடவுள்ளது!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி கோக் வழிநடத்துவார் என தெரிகிறது. செப்டம்பர் 15 முதல் தொடங்கும் இந்த தொடருக்கான முழு பலம் கொண்ட அணியை முன்னதாக தென்னாப்பிரிக்கா அணி அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்தய தரப்பில் அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

முன்னதாக விராட் கோலி தலைமையிலான அணி கடந்த மாதம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகளை தும்சம் செய்தனர். மென் இன் ப்ளூ அணியின் வெற்றி பயணம் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தொடரினை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் ஷர்மா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையல், தற்போது வெளியாகியுள்ள இந்திய அணி பட்டியலில் கே.எல் ராகுலுக்கு பதிலாக ரோகித் ஷர்மா இடம்பிடித்துள்ளார்.

இந்திய வெளியாகியுள்ள இந்திய டெஸ்ட் அணி பட்டியல் பின்வருமாறு.,

விராட் கோஹ்லி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (VC), ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (WC), விருத்திமான் சஹா (WC), R அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பூம்ரா, இஷாந்த் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Trending News