வரும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது!
புதுடெல்லியில் நடைப்பெற்ற அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கூட்டத்திற்கு பின்னர் அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் அணி, இலங்கை அணிக்கு எதிரான டி20 அணி மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய A அணி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷவர்த் சடே , ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்
இந்தியாவின் ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திரா குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்கூர், மொஹமது ஷமி.
இரண்டு சுற்றுப்பயண போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்களுக்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் (கேப்டன்), சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ஆக்சர் படேல், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், இஷான் பொரல், கலீல் அகமது, மொஹமது ஸ்ரீராஜ்
முதல் நான்கு நாள் ஆட்டத்திற்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மான் கில், ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஷாபாஸ் நதீம், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர் , அவேஷ் கான், மொஹமட். சிராஜ், இஷான் பொரல், இஷான் கிஷன்
இரண்டாவது நான்கு நாள் ஆட்டத்திற்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஆர் அஸ்வின், ஷாபாஸ் நதீம், சந்தீப் வாரியர், அவேஷ் கான், மொஹமட். சிராஜ், இஷான் பொரல்.
தீபக் சாஹரின் காயம் குறித்த தகவல்... தீபக் சாஹரின் கீழ் முதுகில் எலும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தனது மறுவாழ்வை NCA-வில் தொடங்கியுள்ளார், மேலும் ஏப்ரல் 2020-க்குள் போட்டியில் பங்கேற்பதற்கான உடற்தகுதி அவருக்கு மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்பிரீத் பும்ரா மறுபிரவேசம்... காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜாஸ்பிரீத் பூம்ரா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் உள்நாட்டு தொடரில் இடம்பிடித்துள்ளார். அதேப்போல் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 25 தையல்களுடன் ஓய்வில் சென்ற ஷிகர் தாவன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 5 துவங்கி ஜனவரி 10-ஆம் நாள் வரை, மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது. இதனைத்தொடர்ந்து ஜனவரி 14 துவங்கி ஜனவரி 19-ஆம் தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்நிலையில் இவ்விரு தொடருக்கான இந்திய அணி தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.