தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் - டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி இன்று தொடங்கி செப்டம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்) நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.
28 லீக் ஆட்டம், இரண்டு அரை இறுதி, இறுதிப்போட்டி என உள்பட மொத்தம் 31 ஆட்டம் நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதியில் வெற்றி பெரும் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தென்சென்னை)
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி),
ரூபி காஞ்சி வாரியர்ஸ் (காஞ்சீபுரம்),
வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் (திருவள்ளூர்),
மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (மதுரை),
திண்டுக்கல் டிராகன்ஸ் (திண்டுக்கல்),
லைகா கோவை கிங்ஸ் (கோவை),
காரைக்குடி காளை (காரைக்குடி) ஆகிய
இன்றைய தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.