KKR vs SRH IPL Finals 2024 Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இரவு 7. 30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியின் டாஸை வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
பெரிய அதிர்ச்சி
இந்த சீசனில் மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரை அடித்த சன்ரைசர்ஸ் அணி இன்றைய ஆடுகளத்தில் நிச்சயம் ஒரு பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 113 ரன்களில் ஆல்-அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது எனலாம். கொல்கத்தாவின் மிரட்டலான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் ஹைதராபாத் விக்கெட்டுகளை இழந்தது.
மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா 2 ரன்களுக்கும், வைபவ் அரோரா வீசிய அடுத்த ஓவரில் ஹெட் ரன் ஏதும் இன்றியும் பெவிலியன் திரும்பினர். ஸ்டார்க் வீசிய 5ஆவது திரிபாதி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் 40 ரன்களுக்கு எஸ்ஆர்ஹெச் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
114 ரன்கள் இலக்கு
இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. பெரிய பார்ட்னர்ஷிப்கள் அமையவே இல்லை. நிதிஷ் ரெட்டி 13, மார்க்ரம் 20, ஷாபாஸ் அகமது 8, அப்துல் சமத் 4, கிளாசென் 16 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் - உனத்கட் ஜோடி 23 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தொடர்ந்து உனத்கட் 4 ரன்களிலும், கம்மின்ஸ் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே 113 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.
குறிப்பாக, கொல்கத்தாவின் பந்துவீச்சில் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நரைன், வருண் சக்ரவர்த்தி, அரோரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 114 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி தற்போது துரத்தி வருகிறது.
Innings Break!
A relentless bowling effort in the #Final from Kolkata Knight Riders
Ato achieve glory
Can #SRH turn things around things around with the ball?
Scorecardhttps://t.co/lCK6AJCdH9#TATAIPL | #KKRvSRH | #TheFinalCall pic.twitter.com/DLqIvWQoKf
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
ஈஸியாக கப் அடிக்குமா கேகேஆர்?
இதுவே ஐபிஎல் இறுதிப்போட்டி வரலாற்றில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும். 2013ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிஎஸ்கே மும்பை அணிக்கு எதிராக 125 ரன்களை மட்டுமே எடுத்தது. இதுதான் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோராக இருந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை 129 ரன்களை அடித்து 130 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெறும் 128 ரன்களை மட்டுமே அடித்து கோப்பை நழுவவிட்டது. இதுவே இறுதிப்போட்டியில் டிபெண்ட் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும். ஹைதராபாத் அணி பந்துவீச்சில் இந்த சாதனை முறியடிக்குமா அல்லது கொல்கத்தா ஈஸியாக கோப்பையை வெல்லும் என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
2012ஆம் ஆண்டு இதே சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி சிறப்பாக சேஸிங் செய்து கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் இன்றும் இந்த எளிய இலக்கை துரத்தி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ