15 ஆண்டுகள் கழித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி re-entry கொடுத்த S Sreesanth

50 ஓவர்களுக்கான விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் கேரள அணியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்த், அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2021, 04:37 PM IST
  • விஜய் ஹசாரே டிராஃபியில் ஸ்ரீசாந்த் அபார ஆட்டம்.
  • உத்தர பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • நான் IPL ஏலத்திற்காக தெர்ந்தெடுக்கப்படாதது ஏமாற்றமளித்தது- ஸ்ரீசாந்த்.
15 ஆண்டுகள் கழித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி re-entry கொடுத்த S Sreesanth title=

Vijay Hazare Trophy: 50 ஓவர்களுக்கான விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் கேரள அணியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்த், அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 15 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு லிஸ்ட் ஏ வடிவத்தில் ஸ்ரீசாந்த், முதன் முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL ஸ்பாட் ஃபிக்சிங் விவகாரத்தில் சிக்கி, ஏழு ஆண்டுகால தடையை அனுபவித்த பிறகு, உள்நாட்டு போட்டிகளில் முதன்முறையாக ஆடிய ஸ்ரீசாந்த், 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முறையாக ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர் இந்த போட்டியில் 9.3 ஓவர்களில் 65 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் விளைவாக உத்தரபிரதேச அணி 49.4 ஓவர்களில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

பெங்களூரு கே.எஸ்.சி.ஏ மைதானத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 22) நடைபெறும் குரூப் சி ஆட்டத்தில் கேரளா உத்தரபிரதேசத்தை எதிர்த்து விளையாடிக்கொண்டிருக்கிறது. உத்தரபிரதேச தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் கோஸ்வாமியை 54 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஸ்ரீசாந்த் தன் முதல் விக்கெட்டை எடுத்தார் (63 பந்துகள், 2x6, 4x4). உத்தரபிரதேச அணியில் அதிகபட்ச ரன்களை எடுத்த அக்ஷ்தீப் நாத்தின் விக்கெட்டை (68, 60 பந்துகள், 9x4) ஸ்ரீசாந்த் அடுத்ததாக எடுத்தார்.

ALSO READ: IPL Auction 2021: அற்புதமான 3 தொடர்ச்சியான சிக்ஸர்கள், யார் அந்த வீரர்?

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், உத்தரபிரதேச இன்னிங்ஸின் கடைசி மூன்று விக்கெட்டுகளை பின்னர் வீழ்த்தினார். எதிரணியின் கேப்டன் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.

இப்போது இந்த போட்டியில் ஸ்ரீசாந்த் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒடிசாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்ரீசாந்த் 41 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். மழையால் தடைபட்ட இந்த போட்டியில் கேரளா வி.ஜே.டி முறையில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பு, ஸ்ரீசாந்த் 87 லிஸ்ட் ஏ போட்டிகளில் 113 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

முன்னதாக, ஸ்ரீசாந்த் 2021 IPL ஏலத்துக்கு (IPL Auction 2021) ரூ .75 லட்சம் அடிப்படை விலையில் பதிவு செய்திருந்தார். ஆனால் எட்டு உரிமையாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி பட்டியலில் அவரது பெயர் விலக்கப்பட்டிருந்தது.

"நான் ஏலத்திற்காக தெர்ந்தெடுக்கப்படாதது ஏமாற்றமளித்தது. ஆனால் அதனால் நான் துவண்டு வுடவில்லை. கிரிக்கெட்டில் மீண்டும் வருவதற்கு என்னால், 8 ஆண்டுகள் காத்திருக்க முடிந்தால், இன்னும் சிறிது நேரமும் காத்திருக்க முடியும். இதனால் எனக்கு எந்த வருத்தமும் உல்லை” என்றார் ஸ்ரீசாந்த். ஐபிஎல் 2021 ஏலத்தில் அவரது பெயர் சேர்க்கப்படாதது தெரிந்த பின்னர், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடட்ட ஒரு நீண்ட வீடியோவில் ஸ்ரீசாந்த் (S Sreesanth) அவ்வாறு கூறியிருந்தார்.

ALSO READ: IPL Auction 2021: விறுவிறுப்பாய் செல்லும் IPL ஏலம், CSK-வுடன் இணைந்தார் மொயின் அலி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News