‘CSK-வை ஒரு Government Job போல் நினைக்கிறார்கள்’ வீரர்களின் மெத்தனத்தை சுட்டிக்காட்டிய Sehwag

ஆறு ஆட்டங்களில் நான்கே புள்ளிகளைப் பெற்று, CSK தற்போது புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது இடத்தில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2020, 03:24 PM IST
  • ஆறு ஆட்டங்களில் நான்கே புள்ளிகளைப் பெற்று, CSK தற்போது புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • CSK பேட்ஸ்மேன்கள் சிலர் CSK -வை ஒரு அரசாங்க வேலை போல நினைக்கிறார்கள்-சேவாக்.
  • அடுத்த போட்டி திருப்புமுனையாக இருக்கும் என்ற நம்பிகையுடன் CSK ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
‘CSK-வை ஒரு Government Job போல் நினைக்கிறார்கள்’ வீரர்களின் மெத்தனத்தை சுட்டிக்காட்டிய Sehwag title=

துபாய்: எம்.எஸ். தோனி (MS Dhoni) தலைமையிலான CSK அணி புதன்கிழமை தற்போது நடைபெற்று வரும் IPL 2020-ல் இந்த சீசனின் நான்காவது தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) க்கு எதிராக ஆடிய ஆட்டத்தில், 168 என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய CSK அணி, ஒரு கட்டத்தில், கடைசி 10 ஓவர்களில் 79 ரன்கள் தேவைப்பட்டால் போதும் என்ற வசதியான நிலையில் இருந்தது. இருப்பினும், ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் முன்கூட்டியே அதிரடியாக ஆடத் தவறியதால் அவர்களால் ரன்களை வேகமாக எடுத்து, இலக்கை அடைய முடியவில்லை.

முடிவில், ரவீந்திர ஜடேஜா 8 பந்துகளில் 21 ரன்களுடனும் கேதார் 12 பந்துகளில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் KKR அணி வெற்றி பெற்றது.

ALSO READ: IPL 2020 SRH vs KXIP: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

"இது CSK அணி எளிதாக வென்றிருக்கக்கூடிய போட்டி. ஆனால், கேதார் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா சில பந்துகளில் ரன் எடுக்காமல் வீணாக்கியது அவர்களுக்கு வினையாகிப் போனது” என முன்னாள் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் வீரேந்திர சேவாக் (Virendra Sehwag) கிரிக்பஸ்ஸிடம் கூறினார்.

"மேலும், என் பார்வையில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் சிலர் CSK -வை ஒரு அரசாங்க வேலை போல நினைக்கிறார்கள். அவர்கள் நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், அவர்களுக்கு அவர்களது சம்பளம் கிடைத்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார் சேவாக்.

ஆறு ஆட்டங்களில் நான்கே புள்ளிகளைப் பெற்று, CSK தற்போது புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது இடத்தில் உள்ளது. அவர்கள் அடுத்ததாக சனிக்கிழமை துபாயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (RCB) எதிர்த்து ஆடவுள்ளனர்.

சேவாக் மட்டுமல்லாமல், CSK-வின் அனைத்து ரசிகர்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர். அவர்களது அணியிடம் அவர்கள் எதிர்பார்த்தது இதை அல்ல. ஒவ்வொரு போட்டியிலும் ஏமாற்றமே மேலோங்க அடுத்த போட்டி திருப்புமுனையாக இருக்கும் என்ற நம்பிகையுடன் CSK ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ALSO READ: ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தை ரசிக்கும் 'Just Jadeja things' ரசிகர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News