இப்படி ஒரு வேல்ட் கப்ப பார்த்தது இல்ல... தொடரும் ஷாக் வெற்றி - இந்தியாவுக்கு ஆபத்தா?

ICC World Cup 2023: தற்போது ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் முறையே முன்னணி அணிகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இது நடப்பு உலகக் கோப்பை தொடரில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 18, 2023, 08:48 AM IST
  • நேற்று நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கன் வீழ்த்தியது.
  • இதுவரை 9 அணிகள் புள்ளிகளை பெற்றுள்ளன.
இப்படி ஒரு வேல்ட் கப்ப பார்த்தது இல்ல... தொடரும் ஷாக் வெற்றி - இந்தியாவுக்கு ஆபத்தா? title=

ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. அதாவது, அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளைதான் விளையாடி உள்ளன. ஆனால், அதற்குள்ளேயே பெரிய ட்விஸ்ட்டை இந்த தொடர் சந்தித்துள்ளது எனலாம். 

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை தோல்வியை தழுவாமல் வெற்றி முகத்தில் இருந்தாலும் மற்ற அனைத்து அணிகளுமே குறைந்தபட்சம் ஒரே தோல்வியையாவது பெற்றுவிட்டது. ஆனால், 10 அணிகளில் 9 அணிகள் தற்போது புள்ளிகளை பெற்றுவிட்டன. இலங்கை மட்டுமே இன்னும் தனது கணக்கை தொடங்காமல் உள்ளது. 

ஆப்கன் போட்ட விதை

ஆப்கானிஸ்தான் (Afghanistan) இந்த தொடரில் நிச்சயம் ஒரு பெரிய அணியை வீழ்த்தும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. இருப்பினும், வங்கதேசம், இந்திய அணிகளுக்கு எதிரான தோல்வியை அடுத்து பலரும் நம்பிக்கையற்று பேசினர். ஆனால், ஆப்கன் அணி இங்கிலாந்து சுக்குநூறாக நொறுக்கி அந்த வரலாற்று வெற்றியை ருசி பார்த்தது. 

நேர்த்தியாக விளையாடிய நெதர்லாந்து

நேற்று நெதர்லாந்து அணியும் (Netherlands) ஆப்கான் போட்ட பாதையில் அவர்களை காட்டிலும் பெரும் போராட்டமே நடத்தி தென்னாப்பிரிக்காவை (SA vs NED) சரித்தது. நெதர்லாந்து அணி தனது பேட்டிங்கில் கடைசி 13 ஓவர்களுக்கு காட்டிய அதிரடி என்பது அவர்களின் வெற்றியின் முக்கிய அங்கமாகும். அவர்களின் நேர்த்தியான பந்துவீச்சு பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெளிப்பட்டது. ஆனால், அதை இந்த போட்டியில் அவர்கள் சிறப்பாக கொண்டுவந்தது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியை முதல்முறையாக அதுவும் உலகக் கோப்பையில் வீழ்த்தியிருக்கிறார்கள். 

மேலும் படிக்க | லார்ட் தாக்கூர் கட்டாயம் விளையாட வேண்டியது ஏன்? - முக்கிய காரணங்கள் இதோ!

சுவாரஸ்யத்தை எட்டிய உலகக் கோப்பை

ஆப்கானிஸ்தான் தோல்வியால் துவண்டு கிடந்த இங்கிலாந்துக்கும், தொடக்க கட்ட தோல்வியால் பின்னடவாக காணப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கும், ஏன் வங்கதேசம், இலங்கைக்கும் கூட அரையிறுதிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன, இந்த இரு அணிகளின் வரலாற்று வெற்றிகள். 

இந்த அணிகள் தொடர்ந்து இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் நடப்பு தொடரிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அரையிறுதிக்கு கூட வர இயலும். தற்போது அந்த அளவிற்கு தொடர் அனைவருக்குமானதாக மாறி, சுவாரஸ்யத்தை ஏற்றியுள்ளது. இனி ஒவ்வொரு போட்டியும் அதிகம் கவனிக்கப்படும், அதிக முக்கியத்துவத்தை பெறும். 

அரையிறுதி ரேஸில் இந்தியாவுக்கு ஆபத்தா

இந்தியா (Team India), நியூசிலாந்து அணிகள் இதுவரை தோல்வியை சந்திக்காவிட்டாலும் அந்த அணிகளுக்கும் சேர்த்துதான் இந்த இரு வெற்றிகள் எச்சரிக்கை மணியை அடிக்கின்றன. ஆப்கானிஸ்தான் இன்று நியூசிலாந்தை சுழலுக்கு சாதகமாக இருக்கும் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. இதிலும் ஆப்கன் சிறப்பாக செயல்பட்டால் தொடர் இன்னும் சுவாரஸ்யமாகும். 

தோல்வியை தழுவாத வரை இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு பிற முக்கிய நாடுகளின் தோல்வி என்பது போனஸ்தான். எனவே, இப்போது வரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு செல்வதில் எந்த பாதிப்பும் இல்லை. இந்தியா - வங்கதேசத்தை நாளை (அக். 19) புனே மைதானத்தில் சந்திக்கிறது. 

மேலும் படிக்க | தோனியை போல் ரோஹித்... கேப்டன்ஸியில் கெத்து காட்டும் ஹிட்மேன் - 3ஆவது கப் லோடிங்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News