ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52. தாய்லாந்தில் இருக்கும் அவரது வீட்டில் உயிரிழந்ததாக, அவரது நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் கோ சாமூய்யில் வார்னேவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் இருந்தபோது, எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளார். சந்தேகமடைந்த வீட்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் வார்னேவை பரிசோதித்தபோது, மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்துக்குப்பிறகு என்டிரியான வீரர் - ராஜஸ்தானின் ராஜதந்திரம்..!
வார்னேவின் இழப்பு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியபோது சுழற்பந்துவீச்சில் எதிரணியினரை கலங்கடித்த அவர், பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். டெஸ்டில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார். 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க | INDvsSL: முதல் டெஸ்டிலேயே இப்படியொரு சாதனை படைத்த ரோகித்..!
194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைகளை வெல்வதற்கு காரணமாக இருந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வார்னே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்று சாதனை படைத்தது. வார்னேவின் மறைவுக்கு கிரிக்கெட் உலகினர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR