கொழும்புவில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: நாளை துவக்கம்

Last Updated : Aug 2, 2017, 05:45 PM IST
கொழும்புவில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: நாளை துவக்கம் title=

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டியில் நாளை கொழும்புவில் துவங்குகிறது. போட்டிக்கு முன்னதான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக கேரளாவை சேர்ந்த KL ராகுல் களமிறங்குகிறார் என இந்திய கிரிகெட் அணி தலைவர் கொஹ்லி தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அல்லது அபினவ் முகுந்த் நாளைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என கூறியுள்ளார்.

போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்கள் எவ்வாறு தேர்வு செய்யபடுகிறார்கள் என பத்திரிக்கை நண்பர்கள் கேட்ட கேள்விக்கு, போட்டியின் தேவையை பொருத்தும், தாக்கத்தை போருதுமே தேர்ந்தெடுக்க படுகிறார்கள் என கூறினார்.

இந்திய இலங்கைக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெஸ்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில் தொடரை சமன் செய்ய நாளை நடக்கவுள்ள போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முன்னைப்பில் நாளை களமிறங்கவுள்ளது.

Trending News