மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வரவிருக்கும் Paytm T20I தொடரில் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக விலக்கப்பட்டுள்ளார். 

Written by - Mukesh M | Last Updated : Nov 27, 2019, 12:39 PM IST
  • எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன்! title=

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வரவிருக்கும் Paytm T20I தொடரில் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக விலக்கப்பட்டுள்ளார். 

சூரத்தில், மகாராஷ்டிராவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டிராபி  ஆட்டத்தின் போது தவானுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவரது நிலை குறித்து மறுபரிசீலனை செய்ய BCCI மருத்துவ குழு செவ்வாய்க்கிழமை அவரை மதிப்பீடு செய்தது. சோதனையின் போது தவானின் காயத்தின் தையல்கள் வெளிப்படவும், காயம் முழுமையாக குணமடையவும் இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என BCCI மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் தவானின் இடைவெளியைனை பூர்த்தி செய்யும் விதமாக, அகில இந்திய மூத்த தேர்வுக் குழு மேற்கிந்திய தீவுக்கு எதிரான தொடரில் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை பெயரிட்டுள்ளது.

அண்மையில் வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற பிங்க் பந்து டெஸ்டின் போது டீம் இந்தியா விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா-வுக்கு வலது மோதிர விரலில் அடிப்படத்து. இதில் அவரது எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து BCCI மருத்துவக் குழு ஒரு கை மற்றும் மணிக்கட்டு நிபுணரிடம் ஆலோசனை நடத்தியது, மேலும் சஹா எலும்பு முறிவை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மும்பையில் சாஹாவுக்கு ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் சாஹா குறித்து BCCI மருத்துவ குழு தெரிவிக்கையில்., "தற்போது நலமாக இருக்கின்றார். விரைவில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வைத் தொடங்குவார்." என குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் கீழே...

India’s squad for 3 T20Is: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், சஞ்சு சாம்சன்

Trending News