Viral Chat: 'அவருக்கு ஆங்கிலமே தெரியாது': ரவீந்திர ஜடேஜாவை கிண்டல் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் அடிக்கடி வீரர்கள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அண்மையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி அவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 05:50 PM IST
  • சஞ்சய் மஞ்ச்ரேகர் அடிக்கடி இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம்.
  • அண்மையில், ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி அவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
  • சஞ்சய் மஞ்ச்ரேகர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும் கேலி செய்திருக்கிறார்.
Viral Chat: 'அவருக்கு ஆங்கிலமே தெரியாது': ரவீந்திர ஜடேஜாவை கிண்டல் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்  title=

புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் அடிக்கடி வீரர்கள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அண்மையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி அவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்களால் அவர் பல  விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளார். 

இப்போது மீண்டும் சஞ்சய் மஞ்ச்ரேகர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை கேலி செய்திருக்கிறார்.

சஞ்சய் மஞ்ச்ரேகரின் சேட் வைரலாகியது

இந்த முறை சஞ்சய் மஞ்ச்ரேகரின் (Sanjay Manjrekar) சேட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ரவீந்திர ஜடேஜாவை கேலி செய்வதை காண முடிகிறது. ட்விட்டரில் சூர்யநாராயண் என்ற பயனர் தனது ட்விட்டர் கணக்கில் இந்த சேட்டை வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட்டின் உண்மைத்தன்மையை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம். 

ட்விட்டரில், சூரியநாராயண் ட்வீட் செய்து, சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது தேவை இல்லாத பேச்சுக்களால்தான் தலைப்புச் செய்திகளில் இருக்க விரும்புகிறார், ரவிச்சந்திரன் அஸ்வினின் (Ravichandran Ashwin) திறமையில் மஞ்ச்ரேகருக்கு 10 சதவீதம் கூட இல்லை என்று எழுதியுள்ளார். இதற்குப் பிறகு, சஞ்சய் மஞ்ச்ரேகர் அந்த பயனருக்கு தனிப்பட்ட செய்தியை அனுப்பி பதிலளித்தார். இந்த பயனர் அந்த சேட்டை வெளியிட்டுள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேகருக்கும் ட்விட்டர் பயனருக்கும் இடையே கடுமையான விவாதம் நடந்தது

சஞ்சய் மஞ்ச்ரேகர் ட்வீட்டுக்கு பயனர் சூரியநாராயணுக்கு பதிலளித்து, நீங்களும் என்னைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, ஏனெனில் நீங்கள் என்னில் 1 சதவீதம் கூட இல்லை என்று கூறினார். மஞ்ச்ரேகரின் இந்த பதிலுக்குப் பிறகு, பயனர் அவருக்கு ஒரு பொருத்தமான பதிலைக் கொடுத்தார். ரவீந்திர ஜடேஜாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். சஞ்சய் மஞ்ச்ரேகரை ஜடேஜா கண்டித்த விவகாரத்தை அவருக்கு நினைவுபடுத்தினார்.

ALSO READ: VIRAL: அனுஷ்கா-விராட் கோலி தம்பதிகளின் மகள் Vamikaவின் முதல் புகைப்படம்

சஞ்சய் மஞ்ச்ரேகர் ஜடேஜாவை கேலி செய்தார்

சூரியநாராயணனின் இந்தச் செய்திக்குப் பிறகு, சஞ்சய் மஞ்ச்ரேகர் கோபமடைந்து ஜடேஜாவைப் (Ravindra Jadeja) பற்றி எழுதினார், 'நானும் உங்களைப் போல வீரர்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? நான் ஒரு ரசிகன் அல்ல, நான் ஒரு ஆய்வாளர். மேலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே நான் அவரிடம் கூறிய விஷயத்தின் (பிட்ஸ் அண்ட் பீசஸ் கிரிக்கெட் வீரர்) அர்த்தம் கூட அவருக்குத் தெரியாது. ஆனால், வர்பல் டயேரியா என்ற வார்த்தையின் அர்த்தத்தை யாராவது அவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.

அஸ்வின் பற்றி மஞ்ச்ரேகர் கூறினார்
சஞ்சய் மஞ்ச்ரேகர் கிரிக் இன்ஃபோவிடம், 'மக்கள் அவரை (அஸ்வின்) அனைத்து காலத்திலும் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு இதில் சில சிக்கல் உள்ளது. அஸ்வினிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர் SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரு முறை கூட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.

ALSO READ: அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சால் அச்சம்: உலகக் கோப்பைக்கு முன் New Zealand வீரரின் வெளிப்பாடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News