உலகின் அனைத்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர், இந்தியாவின் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டு கிர்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாட தொடங்கினார் சச்சின் டெண்டுல்கர். 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்தார்.
1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நவம்பர் 15-ம் தேதி தொடங்கிய முதல் போட்டி கராச்சியில் நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது தான் முதல் முறையாக சச்சின் என்ற இளைஞன், இந்திய அணிக்காக விளையாட களமிறங்குகினார். முதல் போட்டியில் 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அன்று முதல் அடுத்த 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடினார். அந்த இளைஞன் தான் இன்று இந்திய இளைஞர்களின் கிரிக்கெட் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கர்.
> வலது கை ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.
> 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,466 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
> கிரிக்கெட் வராலாற்றில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர்.
> ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் குவித்த முதல் கிரிக்கெட் வீரர்.
> சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரனகள் குவித்த வீரர்.
> 6 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார்.
> இவர் இடம்பெற்ற தோனி தலைமையிலனா இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அரசின் அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூசண் விருதுகளை பெற்றுள்ளார். மராட்டிய மாநில அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார்.
2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சச்சின், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.