இந்தியா - மேற்கிந்தியா அணிகள் மோதும் 3-வது டி20 போட்டியில் ரோகித் ஷர்மா 69 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்னும் பெருமையினை பெருவார்!
இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் இன்று (நவம்பர் 11-ஆம் நாள்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ரோகித் ஷர்மா 69 ரன்கள் குவித்தார் டி20 போட்டிகளில் அதிக ரன்குவித்த வீரர் என்ற பெருமையினை பெறுவார். இந்த சாதனை பட்டியலில் தற்போது நியூசிலாந்து அணி வீரர் MJ குப்தில் 2271 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் ரோகித் ஷர்மா 2203 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இன்று நடைப்பெறும் போட்டியில் ரோகித் 69 ரன்கள் குவித்தால் குப்தில் சாதனையினை முறியடிப்பார்.
முன்னதாக இன்று நடைப்பெறவுள்ள போட்டியில் இருந்து இந்தியாவில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ், பூம்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. அடுத்தமாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இத்தொடரில் வீரர்கள் முழுதிறனுடன் செயல்பட ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BCCI விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான மூன்று தொடர்களிலும் தோல்வி கண்டுள்ள மேற்கிந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிப்பெற்று ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப முயற்சித்து வருகிறது. இந்நிலையில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இன்றி களம்காணும் இந்தியா அணி பேட்ஸ்மேன்களின் திறனையே நம்பியுள்ளது. முடிந்தவரை அதிக ரன்களை குவித்து மேற்கிந்திய அணிக்கு நெறுக்கடி கொடுக்கும் பட்சத்திலேயே இந்தியா எளிதான வெற்றி காண முடியும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இன்று இரவு 7.00 மணியளவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.!