Rohit Record: ஒரே போட்டியில் ரோகித் 2 ரெக்கார்டு; கோலி - தோனி சாதனை முறியடிப்பு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் 2 சாதனைகளை படைத்த ரோகித்சர்மா, தோனி மற்றும் கோலியின் சாதனைகளை தகர்த்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 3, 2022, 07:51 AM IST
  • ரோகித் சர்மா இரண்டு சாதனை
  • கோலி - தோனி சாதனை முறியடிப்பு
  • அதிக போட்டிகள் ஆடிய முதல் இந்தியர்
Rohit Record: ஒரே போட்டியில் ரோகித் 2 ரெக்கார்டு; கோலி - தோனி சாதனை முறியடிப்பு title=

ஆசிய கோப்பையை இழந்தாலும், அதன்பிறகு நடைபெற்ற இரண்டு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய தெம்புடன் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 2 சாதனைகளை படைத்துள்ளார். மேலும், விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனியின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

ரோகித் சர்மாவின் சாதனை 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 400வது 20 ஓவர் போட்டியாகும். இதன் மூலம் அதிக 20 ஓவர் போட்டிகளை விளையாடியிருக்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு ஏற்கனவே சொந்தக்காரராக இருக்கும் அவர், 400 போட்டிகள் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளை சேர்த்து இத்தனை போட்டிகள் அவர் விளையாடிருக்கிறார். தோனி, கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மட்டுமே 350க்கும் அதிகமான 20 ஓவர் போட்டிகளை விளையாடியிருக்கும் இந்திய வீரர்கள் ஆவர்.

மேலும் படிக்க |இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?

முதல் இந்திய கேப்டன்

இந்தியாவில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 20 ஓவர் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையும் ரோகித் சர்மா வசம் வந்துள்ளது. இந்த தொடருக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் ஒரு டி20 தொடரை கூட இழந்ததில்லை. முன்னதாக 2015ல் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா, 2019ல் 1-1 என சமன் செய்தது. இந்த ஆண்டு ஜூலையிலும் இரு அணிகளுக்கு இடையேயான தொடர் 2-2 என சமநிலையில் முடிந்திருந்த நிலையில், இப்போது தொடரை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி.

20 ஓவர் உலகக்கோப்பை  

ஆசிய கோப்பை தொடரை இழந்த இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க தொடரையும் கைப்பற்றியிருக்கும் இந்தியா, நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கிறது.

மேலும் படிக்க | T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News