Tokyo Olympics போட்டிகளில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்

டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முடிவை  ரோஜர் பெடரர்  அறிவித்தார் புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது "முழங்கால்" ஒத்துழைக்காது என்று பெடரர் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2021, 10:29 PM IST
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்
  • புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது முழங்கால் ஒத்துழைக்காது என்று பெடரர் அறிவிப்பு
  • 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுக்கு பல முழங்கால் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது
Tokyo Olympics போட்டிகளில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்  title=

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார், விம்பிள்டன் காலிறுதியில் இருந்து வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு.டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் (Roger Federer) அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முடிவை செவ்வாய்க்கிழமையன்று (2021, ஜூலை 13) ரோஜர் அறிவித்தார் புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது "முழங்கால்" ஒத்துழைக்காது என்று பெடரர் தெரிவித்தார்.

 
20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பல முழங்கால் அறுவை சிகிச்சைகள் காரணமாக 2020 ஆம் ஆண்டில் பல போட்டிகளில் கலந்துக் கொள்ளவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.  

மார்ச் மாதம் தோஹா ஓபன் (Doha Open) போட்டிகளில் ஃபெடரர் விளையாடினார். அங்கு அவர் இரண்டாவது சுற்றில் நாக் அவுட் ஆனார், பின்னர் ஜெனீவா ஓபனில் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார்.

ஒரு காலத்தில் உலக நம்பர் 1 ஆக விளங்கிய பெடரர் பின்னர் பிரஞ்சு ஓபன் போட்டியில் இருந்தும் விலகினார், விம்பிள்டனுக்கு நான்காவது சுற்றில் நுழைந்த போதிலும், அதன் பிறகு போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Also Read | Wimbledon: ஜோகோவிச் 20 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்

டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவதால் விம்பிள்டனில் இருந்து விலகுவதாக அப்போது சொன்ன ரோஜர் பெடரர், தற்போது மிக முக்கியமான போட்டியான ஒலிம்பிக்ஸில் இருந்தும் விலகிவிட்டார். "விம்பிள்டனுக்குப் பிறகு நிலைமையை மறுபரிசீலனை செய்யலாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் இங்கே எப்படி விளையாடுகிறேன் என்பதைப் பொருத்து ஒலிம்பிக்ஸ் பங்கேற்பு பற்றி முடிவு செய்ய நினைத்தேன்" என்று பெடரர் தெரிவித்தார்.

39 வயதான அவர் விம்பிள்டன் காலிறுதியில் நேர் செட்களில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். இது 2002ஆம் ஆண்டுக்கு பிறகு அவரது மிகப் பெரிய தோல்வியாகும்.

அந்தப் போட்டியில் இருந்து வெளியேறிய உடனேயே, ஃபெடரர் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா என்று கேட்டதற்கு, உறுதியாக தெரியவில்லை என்று கூறினார்.

Also Read | சாதனை: ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் பெடரர் மற்றும் ஜோகோவிச்

"போட்டிகளிலும், விம்பிள்டனிலும் கலந்துக் கொள்வேனா இல்லையா என்பது எனக்கு உண்மையில் தெரியாது. நான் மீண்டும் சரியாக என்னை ஒருங்கிணைக்க வேண்டும். இப்போது ஓய்வு எடுக்கமாட்டேன் என்று நம்புகிறேன். ... விளையாடுவதே எனது நிச்சயமாக குறிக்கோள்” என்று பெடரர் தெரிவித்தார்.

டோக்கியோவில் டென்னிஸ் போட்டிகளில் இந்த ஆண்டு பல டென்னிஸ் ஜாம்பவான்கள் கலந்துக் கொள்ளவில்லை. ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப் நிக் கிர்கியோஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் என பலர் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக் கொள்ளவில்லை. தற்போது அந்தப் பட்டியலில் ரோஜர் பெடரரும் இணைந்துவிட்டார்.

Also Read | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News