இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் போட்டி நேற்று இரவு டெல்லியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 211 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இஷான் கிஷன் 76 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 36 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 31 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. இலக்கு கடினம் என்று கருதப்பட்டதால் தென் ஆப்பிரிக்க அணி தோல்விடைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் நினைத்தனர். அதற்கேற்றபடி டிகாக் 22 ரன்களிலும், பவுமா 10 ரன்களிலும், பிரிட்டோரியஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி 81 ரன்னில் 3 விக்கெட்டை (8.4 ஓவர்) இழந்து தடுமாற ஆரம்பித்தது.
அந்தச் சமயத்தில் வான்டெர் டூசெனும் - டேவிட் மில்லரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாகவும், தேவைப்பட்ட நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. எனவே தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
மேலும் படிக்க | Ambani vs Amazon: ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றப்போவது யார்?
இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், “நாங்கள் போதுமான ரன்களை எடுத்தோம். ஆனால் பந்துவீச்சின்போது எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறிவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன்.
சில சமயங்களில் எதிரணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். டேவிட் மில்லர், வான்டெர் டூசென் நன்றாக பேட்டிங் செய்தனர். நாங்கள் பேட்டிங் செய்தபோது மெதுவான பந்துகள் நன்றாக செயல்பட்டன. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங்குக்கு அதிகமாகவே உதவியது.
பெரும்பாலும் நாங்கள் எங்கள் திட்டங்கள் டேவிட் மில்லரை நோக்கியே இருந்தன. ஆனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக, சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அடுத்த முறை இதேபோன்ற சூழ்நிலையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.
மேலும் படிக்க | ஆவேஸ்கான் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க வீரரின் பேட் உடைந்தது - வீடியோ
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது. அடுத்த போட்டியானது கட்டாக்கில் நாளை மறுநாள் நடக்கவிருக்கிறது. அந்தப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR