Royal Challengers Bangalore அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவதத் படிக்கலுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தேவதூத் படிக்கலுக்கு பதிலாக எந்த வீரரை களம் இறக்கலாம் என்ற குழப்பம் அணிக்கு தலைவலியாக மாறிவிட்டது.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையால் பல பிரபலங்களும் பாதிக்கப்படும் செய்திகள் வெளியாகி கவலைகளை அதிகரித்திருக்கும் நிலையில் ஐ.பி.எல் போட்டியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
2nd wave of #COVID19 in #India has put a scare into #IPL2021 . Latest is that star #RCB opening batsman #DevduttPadikkal has tested positive and is in quarantine. Doubtful whether he will be fit for 1st #IPL match on Apr 9 in #Chennai between #RCBvsMI!
— Sreedhar Pillai (@sri50) April 4, 2021
ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் வீரர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் பலத்த பாதுகாப்புடன், அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடித்து வரும் சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்ற கேள்விகள் எழுகின்றன.
Also Read | மும்பை வாங்க்டே ஸ்டேடியத்தில் எட்டு பேருக்கு COVID-19 பாதிப்பு
ஆர்.சி.பி தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் (Devdutt Padikkal), அணியினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு (Quarantine) ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சந்தேகம் என்பதால் அணியின் கவலைகள் அதிகரித்துள்ளன.
ஐ.பி.எல் போட்டிகளில் இந்த பருவத்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக தேவதத் படிக்கல் இருந்தார். அவர் ஆர்.சி.பியின் வீரர்களில் அதிக திறமைசாலி என்று கருதப்பட்டவர். பிளேஆஃப்களை உருவாக்கும் ஆர்.சி.பியின் மிகப்பெரிய காரணிகளில் ஒருவராக கருதப்பட்ட தேவதூத் படிக்கலுக்கு கொரோனா (coronavirus) பாதிப்பு என்பது அணிக்கும் பின்னடைவு தான்.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் (Mumbai Indians), ஆர்.சி.பி அணிக்குமான முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR