Unbeaten Nadal: செபாஸ்டியன் கோர்டாவை தோற்கடித்து அற்புதமாக மறுபிரவேசம் செய்த ரபேல் நடால்

செபாஸ்டியன் கோர்டாவுக்கு எதிரான வெற்றியின் மூலம், நடால் 16 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று அதிரடி காட்டியுள்ளார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 13, 2022, 12:48 PM IST
  • தொடர்ந்து 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று ரஃபேல் நடால் சாதனை
  • இண்டியன் வெல்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால்
  • அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தினார் நடால்
Unbeaten Nadal: செபாஸ்டியன் கோர்டாவை தோற்கடித்து அற்புதமாக மறுபிரவேசம் செய்த ரபேல் நடால் title=

செபாஸ்டியன் கோர்டாவுக்கு எதிரான வெற்றியின் மூலம், நடால் 16 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று அதிரடி காட்டியுள்ளார்...

செபாஸ்டியன் கோர்டாவுக்கு எதிரான வெற்றியின் மூலம், நடால் இந்த ஆண்டு 16 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று அற்புதமான மறுபிரவேசத்தை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று, (2022, மார்ச் 12, சனிக்கிழமை) இந்தியன் வெல்ஸில் நடந்த இரண்டாவது சுற்றில் ரபேல் நடால் மூன்றாவது செட்டில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை தோற்கடித்தார்.

முதல் செட்டை 35 நிமிடங்களில் கடந்து சென்ற 21 வயது ஸ்பெயின் வீரர் செபாஸ்டியன், நடாலின் ஆக்ரோஷமான அணுகுமுறையை சமாளிக்க போராடினார்.

 நடாலின் சாதாரணமாக உறுதியான சர்வீஸ், செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தியது.  கோர்டாவின் பேக்ஹேண்ட் பரந்த அளவில் தரையிறங்கியபோது 35 வயது மூத்த வீரர் நடால் லாவகமாக விளையாடி வெற்றிக் கனியை சுவைத்தார்.  

மேலும் படிக்க | German Open பாட்மிண்டன் இறுதிச் சுற்றில் லக்‌ஷ்யா சென்!

"இது விளையாடுவதற்கு எனக்கு மிகவும் பிடித்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும், உங்கள் அனைவருக்கும் முன்னால் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது" என்று மூன்று முறை போட்டியை வென்ற நடால், ஸ்டேடியம் ஒன்னில் கூடியிருந்த பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.

"இன்று நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். செபாஸ்டியன் அருமையாக டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு என்னை தோற்கடிக்கும் வாய்ப்புகளும் இருந்தன, ஆனால் இது டென்னிஸ், விளையாட்டில் எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்."

sports

21 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான நடாலை தனது ஆதர்ச வீரராக பார்த்து வளர்ந்த கோர்டா, தனது செல்லப் பூனைக்கு ரஃபேல் என்று தான் பெயர் வைத்திருக்கிறார்.
ஆனால், ஆதர்ச வீரராக இருந்தாலும், அவரிடம் தோற்பதும் ஒரு விளையாட்டு வீரருக்கு வலி மிக்கதாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. 

இதற்கிடையில், இந்த வெற்றியின் மூலம், நடால் இந்த ஆண்டு 16 போட்டிகளில் தோல்வியடையாமல் உள்ளார்.

 

இந்த மாத இறுதியில் தொடங்கும் மியாமி ஓபனில் தான் போட்டியிடப் போவதில்லை என்று நடால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக சனிக்கிழமையன்று, புதிதாக மகுடம் சூடிய உலகின் முதல் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவ், டோமாஸ் மச்சாக்கை 6-3 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் வெப்பமான நாளில் மெட்வெடேவின் சக்திவாய்ந்த விளையாட்டு மற்றும் கிட்டத்தட்ட ஊடுருவ முடியாத தற்காப்பு விளையாட்டு, ரசிகர்களுக்கு அற்புதமான விருந்தாக இருந்தது.

மேலும் படிக்க | கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை - ரோகித்ஷர்மா வாய்ப்பு கொடுப்பாரா? எதிர்பார்க்கும் வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News