சுவிஸ் ஓபன் 2022 பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார் பிவி சிந்து

இந்தியாவின் பிவி சிந்து சுவிஸ் ஓபன் 2022 பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

Last Updated : Mar 27, 2022, 05:08 PM IST
சுவிஸ் ஓபன் 2022  பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார் பிவி சிந்து title=

இந்தியாவின் பிவி சிந்து சுவிஸ் ஓபன் 2022 பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை வீழ்த்திய பிவி சிந்து சுவிஸ் ஓபன் 2022 மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். 

 

 

தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பான் மற்றும் ஆறாம் நிலை வீராங்கனை பி.வி.சிந்து  இடையிலான மோதலில் 21-16, 21-8 என்ற செட் கணக்கில்  இந்திய பாட்மிண்டன் வீராங்கனை வெற்றி பெற்றார்.  

இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து (PV Sindhu), தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி பட்டத்தை வென்றார். 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-16, 21-8 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ஓங்பாம்ருங்பானை வீழ்த்தினார்.

sports

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியின் உச்சநிலை மோதலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை நேரான ஆட்டத்தில் வீழ்த்தி, இந்த சீசனின் இரண்டாவது மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற சிந்து, 21-16, 21-8 என்ற செட் கணக்கில் இங்குள்ள செயின்ட் ஜகோப்ஷல்லேயில் நடந்த போட்டியில் 21-16, 21-8 என்ற கணக்கில் நான்காம் நிலை வீராங்கனையான தாய்லாந்து வீராங்கனையை 49 நிமிடங்களில் வென்றார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயதான சிந்து, 2019 இல் உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்றவர்.  2019 ஹாங்காங் ஓபனில் தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானிடம் ஒரே ஒரு முறை தோற்றுள்ளார். மொத்தம் 17 போட்டிகளில் புசானனுக்கு எதிராக களம் இறங்கிய சிந்து பெற்ற 16வது வெற்றி இது.

மேலும் படிக்க | வெற்றிப் பாதையில் பிவி சிந்து 

ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் கடந்த முறை இறுதிப் போட்டியில் சிந்து தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையத் மோடி இன்டர்நேஷனல் சூப்பர் 300 போட்டியில் சிந்து வென்றார். சூப்பர் 300 போட்டிகள் BWF டூர் நிகழ்வுகளின் அடுத்த இடத்தை பிடிக்கும் பேட்மிண்டன் போட்டி ஆகும்.

மேலும் படிக்க | 27 ஆண்டு சாதனையை முறியடித்த பாபர் அசாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News