அணியில் இடம் கிடைக்காததால் விரக்தியில் இந்திய வீரர் செய்த செயல்!

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் தொடர்களுக்கான அணிகளை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 1, 2022, 01:13 PM IST
  • நவம்பர் 2வது வாரத்தில் முடிவடைகிறது உலகக்கோப்பை தொடர்.
  • நியூஸிலாந்து, பங்களாதேஷ் நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம்.
  • இதற்கான அணியை அறிவித்தது பிசிசிஐ.
அணியில் இடம் கிடைக்காததால் விரக்தியில் இந்திய வீரர் செய்த செயல்! title=

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அக்டோபர் 31 திங்கட்கிழமை, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்களுக்கான அணிகளை அறிவித்தது. ஆனால் பிரித்வி ஷா இந்திய அணியில் இருந்து மீண்டும் புறக்கணிக்கப்பட்டார். 22 வயதான அவர் கடந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.  ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த சில நாட்களில் தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மூத்த பேட்டர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி! இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகிறதா?

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்க உள்ளார்.  அனுபவம் வாய்ந்த பேட்டர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பைப் பெறுவார்கள். எவ்வாறாயினும், டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விளையாடப்படும் டீம் இந்தியாவின் வைட் பால் போட்டிகளில் பங்கேற்க ஷாவும் தகுதியானவர் என்று ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பலர் கருதினர்.

 

அவர் தனது ஏமாற்றத்தை நேரடியாக வெளிப்படுத்தாத நிலையில், இன்ஸ்டாகிராமில் சாய்பாபாவின் படத்தை பகிர்ந்து "நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் சாயிபாபா" என்று பதிவிட்டு உள்ளார்.  2018 இல் இந்தியாவுக்காக அறிமுகமான ஷா, ஐந்து டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் மட்டுமே இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவுக்காக இளம் வயதில் டெஸ்ட் சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷா. தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஷாவின் உடற்தகுதி தான் அவர் தேசிய அணிக்கு திரும்ப அழைக்கப்படாததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News