இங்கிலாந்து தொடரில் இணைந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக டிரா செய்யப்பட்டது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2021, 02:04 PM IST
இங்கிலாந்து தொடரில் இணைந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்!  title=

இந்திய அணியின் இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்தில் நடக்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அணியில் இணைந்தனர்.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக டிரா செய்யப்பட்டது.  தற்போது 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் குவாரண்டைன் நாட்கள் முடிந்து தற்போது இந்திய அணியுடன் சேர்ந்து விட்டனர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ALSO READ | England vs India: 2வது டெஸ்ட் போட்டி கே.எல் ராகுல் செய்த சாதனை!

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் விளையாடிய பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் அங்கிருந்து நேரடியாக கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டனர்.  கொரோனா விதிமுறைகள் காரணமாக பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது இந்திய அணியுடன் இணைந்து உள்ளனர்.  

ஜூலை 26ம் தேதியே இருவரும் இங்கிலாந்துக்கு எதிரானடெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்தது.  கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.  தற்போது உள்ளூர் போட்டி மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி தற்போது மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  பெங்கால் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஆன அபிமன்யு ஈஸ்வரன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைந்துள்ளார்.  

சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும்  ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக விலகியதால் இவர்கள் 3 பேரும் தற்போது அணியில் இணைந்துள்ளனர்.  

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | உலக கோப்பை கிரிக்கெட்: 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News