மும்பை அணியை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சீவ் கோயங்கா

லக்னோ அணியில் கௌதம் கம்பீர் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்குவார் என்று லக்னோ ஐபிஎல் அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 19, 2021, 04:29 PM IST
மும்பை அணியை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சீவ் கோயங்கா title=

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) புதிதாக வந்துள்ள லக்னோ அணியின்  ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.  கம்பீரின் நியமனம் குறித்து RPSG குழுமத்தின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியபோது, கம்பீர் லக்னோ அணியில் ஒரு ஆலோசகராக மிக பெரிய பொறுப்பை பெற்றுள்ளார்.  லக்னோவை ஒரு வலிமையான அணியாக மாற்றவும், வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும்  அவர் உறுதுணையாக இருப்பார். கம்பீர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 2012 மற்றும் 2014 இல் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ALSO READ | இந்தியாவின் மிகவும் பலமிக்க கேப்டன் கோலி! ஏன்?

லக்னோ அணி கௌதம் கம்பீரை முதன்மை வீரராக கருதும்.  ஐபிஎல்-ல் நீண்ட காலத்திற்கு அணியை எடுத்து செல்ல உதவியாக இருப்பார்.  கம்பீர், புதிய தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவருடன் இணைந்து பணியாற்றுவார்.  தற்போது லக்னோ அணியில் இரண்டு திறமைமிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.  இருவருமே அபரிமிதமான கிரிக்கெட் அறிவு மற்றும் தீவிர அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். 

gauthamgambir

கேகேஆர் அணியின் வளர்ச்சிக்கு இவரது பங்கு முக்கியமானது.  கடந்த முறை ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி போல் இல்லாமல், லக்னோ அணியுடன் நீண்ட காலம் பயணிக்க திட்டம் வைத்து உள்ளோம்.  டெல்லி கேபிடல்ஸ் அணி நாங்கள் ஐபிஎல் விதியை மீறிவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.  அவர்கள் எளிதாக ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யலாம்.  ஆனால், அடிமட்டத்தில் இருந்து ஒரு அணியை உருவாக்க வேண்டிய லக்னோவுக்கு இது எளிதான காரியமில்லை.  எனக்கு மிகப்பெரிய உத்வேகம் தரக்கூடியது மும்பை இந்தியன்ஸ் தான். அவர்கள் செய்த சாதனை, அணியை வழிநடத்தும் முறைகள் போன்றவை ஆச்சர்யப்பள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள விளையாட்டு உரிமையாளர்களும் கற்று கொள்ள வேண்டும் என்று கோயங்கா கூறினார்.

ALSO READ | திடீர் என்று டெஸ்ட் அணியில் இருந்து விலகிய ரோஹித் - காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News