IND vs NZ 2nd ODI: 22 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது..!

Last Updated : Feb 8, 2020, 04:55 PM IST
IND vs NZ 2nd ODI: 22 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்! title=

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது..!

ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கப்டில் (79), நிக்கோல்ஸ் (41), டெய்லர் (73) ஆகியோர் சிறப்பாக விளையாடி, அணிக்கு ரன்களைக் குவித்தனர். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா (55), எஸ்எஸ் ஐயர் (52), சைய்னி (45) ரன்களை எடுத்தனர். நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஏற்கெனவே டி20 தொடரை 5-0 என கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

 

Trending News