இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு டி20 5வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது!
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட்டிக் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 89(31) ரன்கள் குவித்தார். தவான் 35(27) மற்றம் ரெய்னா 47(30) ரன்கள் குவித்துள்ளார்.
Rohit Sharma misses out on a third T20I but what an innings, and what a partnership with @ImRaina!
The pair added 102 in 9.2 overs to drive India to 176/3. Will it be enough?
FOLLOW #BANvIND LIVE https://t.co/dveSJpMNgS pic.twitter.com/tsa0vZkiOB
— ICC (@ICC) March 14, 2018
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் பேட்டிங் செய்யவுள்ளது!
முன்னதாக நடைப்பெற்ற 4 போட்டிகளின் முடிவுகளில் இந்தியா 2 போட்டிகளிலும், இலங்கை 1 போட்டியிலும் வங்கதேசம் 1 போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளது.
லீக் போட்டியின் முடிவில் அதிக புள்ளி பெற்றுள்ள அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்ற நிலையில், இப்போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில் இறுதி போட்டியில் விளையாடுவதை உறுதி செய்யும்