BCCI கொரோனா வைரஸ் தொற்றைக் கையாள ஒரு கோவிட் -19 பணிக்குழுவை உருவாக்கி வருகிறது. இதில் முன்னாள் கேப்டனும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவருமான ராகுல் டிராவிடும் (Rahul Dravid) உறுப்பினராக உள்ளார். இதன் விவரங்களை BCCI மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது.
நிலையான இயக்க முறைப்படி அந்தந்த மையங்களில் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு வீரர்கள் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.
பெங்களூருவில் உள்ள NCA-வில் மீண்டும் பயிற்சியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள கோவிட் பணிக்குழுவில் ராகுல் டிராவிட், ஒரு மருத்துவ அதிகாரி, சுகாதார அதிகாரி மற்றும் BCCI AGM ஆபரேஷன்ஸ் ஆகியோர் உள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், முகாமில் பங்குகொள்ள முடியாது.
60 வயதுக்கு மேற்பட்ட சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் கலந்துகொள்ள தடை உள்ளது. மைதானத்திற்கு பயணம் செய்வது முதல் அங்கு பயிற்சி பெறுவது வரை வீரர்கள் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முகாம் தொடங்குவதற்கு முன், மருத்துவ குழு அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பயண மற்றும் மருத்துவ வரலாற்றை (கடந்த 2 வாரங்கள்) ஆன்லைன் கேள்வித்தாள் மூலம் பெற வேண்டும். COVID-19 அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் போது N95 முகக்கவசத்தை அணிய வேண்டியிருக்கும். மேலும் பொது இடங்களில் மற்றும் பயிற்சியின் போது கண்ணாடியை அணிவது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. வீரர்கள் மைதானத்திற்கு செல்ல தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
போட்டிகள் மீண்டும் தொடங்குவது குறித்த அனைத்து முடிவுகளும் MoHFW (மத்திய சுகாதார அமைச்சகம்) மற்றும் உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்படும்.
ALSO READ: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை ஆஸ்திரேலியா ஒத்திவைத்தது