இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் மட்டும் விளையாடி வரும் அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவதை உறுதி செய்துவிட்டார். 40 வயதை கடந்துவிட்டதால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அவரிடமும் கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த தோனி, எனது தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே கம்பேக் கொடுப்பதை நிச்சயம் பார்ப்பீர்கள் எனக் கூறினார்.
அவர் கூறி சில வாரங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், ராஞ்சியில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வலை பயிற்சியை தொடங்கியுள்ளார் தோனி. ஜார்க்கண்ட் மைதானத்தில் அம்மாநில அணி சையது முஷ்டாக் அலி போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகிறது. அந்த அணியுடன் இணைந்து தானும் பயிற்சியை தொடங்கியிருக்கிறார். ஐபிஎல் போட்டிக்கு இன்னும் ஏறத்தாழ 5 மாதங்கள் இருப்பதால், அதற்கான முதல்கட்ட பயிற்சியை தொடங்கியுள்ளார் தோனி. கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்விகளை சந்தித்து 9வது இடத்தை பிடித்தது.
MS Dhoni practicing at JSCA pic.twitter.com/Vjq7mQw2zQ
— Chakri Dhoni (@ChakriDhoni17) October 14, 2022
கேப்டன்சி மாற்றம், அணியில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் சரியாக விளையாட முடியவில்லை. அதனால் தோனியே மீண்டும் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 4 முறை ஐபிஎல் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தமுறை கோப்பையை வெற்றி பெற்று, மகிழ்ச்சியோடு தோனிக்கு விடை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ