இன்று புனே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி, அற்புதமான கேட்ச் பிடித்தார் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வரும் மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 வயதான எம்.எஸ். தோனி பிடித்த கேட்ச் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த வயலிலும் இப்படி ஒரு கேட்ச் பிடிக்க முடியுமா? என அனைவரும் வியப்படைந்து வருகின்றனர்.
Let's talk about MS Dhoni ! #INDvWI pic.twitter.com/cvPx6anEqG
— Vivek (@Vivekizm) October 27, 2018
ஜாஸ்ரிட் பும்ரா வீசிய பந்தை மேற்கிந்திய அணி வீரர் சந்திரபோல் ஹெம்ராஜ் வேகமாக அடித்து ஆட முற்பட்டார். ஆனால் சரியாக அடிக்காததால், பந்து காற்றில் பறந்தது. இதை கவனித்த எம்.எஸ்.தோனி வேகமாக ஓடி காற்றில் பறந்தபடியே அற்புதமாக கேட்ச் பிடித்தார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலானது.
Diving @msdhoni! How good was that catch from MSD?
https://t.co/wR8PWuocvN #INDvWI pic.twitter.com/KVJFoa7ZO7
— BCCI (@BCCI) October 27, 2018
மேலும் அடுத்த நடக்கவிருக்கும் மேற்கிந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 தொடரில் எம்.எஸ்.தோனி தேர்வு செய்யவில்லை கிரிக்கெட் நிர்வாகம். இதனால் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.