மிடில்செக்ஸ் மூலம் அகாடமியில் விளையாடுவார் சச்சின் டெண்டுல்கர்!!

கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் மிடில்செக்ஸ் உடன் இணைந்து புதிய கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 19, 2018, 02:17 PM IST
மிடில்செக்ஸ் மூலம் அகாடமியில் விளையாடுவார் சச்சின் டெண்டுல்கர்!! title=

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் முன்னால் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், மிடில்செக்ஸ் குளோபல் இணைந்து புதிய அகாடமி தொடங்கயுள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர் பயிற்சி அளிக்க போகிறார்.

இந்த புதிய அகாடமியில் ஒன்பது வயது முதல் பதினான்கு வயது வரை உள்ளவர்களுக்கு பயிற்ச்சி அளிக்கப்படும். மேலும் நல்ல திறமை உள்ள 100  குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் மூலமாக வாய்ப்புகள் வழங்கப்படும். "மிடில்செக்ஸ் அகாடமி மூலம் மிகச்சிறந்த திறமைகளை கிரிக்கெட்டில் எப்படி வழங்குவது என்பதில் கவனம் செலுத்துவோம், நல்ல கிரிக்கெட்டரை உருவாக்குவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தின் சிறந்த உலகளாவிய குடிமகனையும் உருவாக்குவதும் எங்கள் இலக்கு என சச்சின் கூறினார்.

அதபோல மிடில்செக்ஸ் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோட்லி, டெண்டுல்கருடன் அகாடமியில் பணியாற்றுவது என்பது "பெரிய பாக்கியம்" என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய அகாடமி மூலம், சச்சினிடம் பயிற்ச்சி பெறுபவர்கள் அவரின் உள்ள தனிப்பட்ட நுண்ணறிவு மற்றும் திறனை பெறுவார்கள். இது பயிற்ச்சி பெரும் குழந்தைகளுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவம் கிடைக்கும். மேலும் இதை குழந்தைகள் மறக்க மாட்டார்கள் "என்று அவர் கூறினார்.

இந்த புதிய அகாடமி முதன் முதலில் நார்த்வொட்டில் உள்ள மெர்ச்சண்ட் டெய்லரின் பள்ளி ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. பின்னர் மும்பை மற்றும் லண்டன் நகரங்களில் முகாம்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சச்சின் 1989 மற்றும் 2013 ஆம் ஆண்டு 200 டெஸ்டுகளில் விளையாடி 15,921 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 51 சதங்களை அடித்துள்ளார். இந்தியா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்ல தனது பங்களிப்பை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News