Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக் போட்டியில் மனுபாக்கர் கலந்து கொண்ட சூட்டிங் போட்டியில் நீரஜ் சோப்ராவும் பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது மனுபாக்கரின் தாயுடன் பேசிய வீடியோவும் வெளியான நிலையில், மனுபாக்கர் - நீர்ஜ் சோப்ரா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன். மனுபாக்கருக்கும், நீரஜ் சோப்ராவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை, இது பொய்யான செய்தி என்றும் கூறியுள்ளார் அவர். மேலும், நீரஜ் சோப்ராவை மகன் ஸ்தானத்தில் வைத்து என் மனைவி பார்கிறார், அப்படி இருக்கும்போது இதெப்படி நடக்கும் என்றும் ராம் கிஷன் வினவியுள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... தலைகீழாக மாறும் இந்த 3 அணிகள்... தூக்கியெறியப்படும் வீரர்கள்!
மனுபாக்கர் தந்தை பேட்டி
தனியார் தொலைக்காட்சிக்கு மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன் பேட்டி அளித்தபோது "ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இப்போது தான் என் மகள் மனு பாக்கர் நாடு திரும்பியிருக்கிறார். அவள் மிக சிறியவள். திருமண வயதை எல்லாம் அவள் எட்டவே இல்லை. அப்படியான வாழ்க்கை குறித்து இன்னும் நாங்களும் சிந்திக்கக்கூட இல்லை. அவளும் சிந்திக்கவில்லை. மனுபாக்கரின் திருமணத்துக்கு எல்லாம் இன்னும் வயது இருக்கிறது. நீரஜ் சோப்ராவை என் மனைவி மகனைப் போல பார்க்கிறார். அப்படி தான் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் நீரஜ் சோப்ராவுடன் பேசினார். இருவரும் நல்ல நட்பில் இருந்தாலும், காதல் எல்லாம் இல்லவே இல்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா மாமா விளக்கம்
நீரஜ் சோப்ராவின் மாமா இது குறித்து பேசும்போது, அவர் இப்போது தான் ஒலிம்பிக்கில் இருந்து பதக்கம் வென்று நாடு திரும்பியிருக்கிறார், ஒட்டுமொத்த இந்தியாவே அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதைப் போலவே எல்லோருக்கும் தெரியும் வகையில் நீரஜ் சோப்ராவின் திருமணமும் நடக்கும் என்று கூறியுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றார். மனுபாக்கர் ஷூட்டிங்கில் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இருவரின் சிறப்பான ஆட்டமும் இந்தியாவை ஒலிம்பிக் பதக்கப்பட்ட பட்டியலில் முத்திரை பதிக்க உதவியது.
மேலும் படிக்க | கிரிக்கெட் வரலாற்றில் டாப் 10 இடது கை பேட்டர்கள்... அசைக்க முடியாத ஆலமரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ